சீரமைப்புப் பணியின் போது தெரியவந்த ஸ்ரீரங்கம் கோயில் நூறு கால் மண்டபம்
By dn, ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் கோயிலினுள் இருக்கும் தீர்த்தகரை ஸ்ரீவாசுதேவப் பெருமாள் சன்னதியில் இருந்த தேவையற்ற சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட பிறகு முழுமையாகத் தெரியும் 100 கால் மண்டபம்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணியின் போது, கோயிலினுள் நூறு கால் மண்டபம் இருப்பது முழுமையாகத் தெரிய வந்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் 156 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இதில் கோயில் வளாகம் மட்டும் 24 ஏக்கரில் உள்ளது. இதில் 7 சுற்று பிரகாரங்கள், 54 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும், அவற்றை பராமரிப்பவர்கள் தங்கள் விருப்பம்போல் நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது.இதனால், இக்கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கல் தூண்கள் பலவும் சுவரால் மறைக்கப்பட்டிருந்தது தற்போதைய சீரமைப்புப் பணியில் தெரிய வந்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தேவையற்ற இடங்களிலுள்ள மண் சுவர்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, கோதண்டராமர், பிள்ளை லோகச்சாரியார், பார்த்தசாரதி, உள் ஆண்டாள், வீரஆஞ்சனேயர், திருப்பாணழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், முதல் ஆழ்வார் உள்ளிட்ட சன்னதிகளின் வெளிப்புறத்தில் இருந்த மண் சுவர் அனைத்தும் இடிக்கப்பட்டு, கோயிலின் பழைமையான தோற்றம் தெரியும் வகையில் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
100 கால் மண்டபம்: கோயிலில் தன்வந்தரி சன்னதி அருகேயுள்ள தீர்த்தகரை ஸ்ரீவாசுதேவப் பெருமாள் சன்னதி சுமார் 1 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த சன்னதியைச் சுற்றி 100 கல் தூண்கள் உள்ளன. இவை சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சுவரால் இணைக்கப்பட்டிருந்தது. இதனால், கல் தூண்கள் இருப்பது இதுநாள்வரையில் பக்தர்களுக்கு தெரியாமல் இருந்து வந்தது.
தற்போதைய சீரமைப்பு பணியின்போது, இச்சன்னதியில் தேவையற்ற மண் சுவரை இடித்தபோது 100 கால் மண்டபம் இருப்பது முழுமையாகத் தெரிய வந்துள்ளது. இதை சீரமைக்கும் பணியை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலில் 1000 கால் மண்டபம் இருப்பது மட்டுமே தெரிந்த நிலையில், தற்போது அங்கு 100 கால் மண்டபமும் இருப்பது தெரிய வந்ததால், பக்தர்களும், மக்களும் திரளாக வந்து அந்த மண்டபத்தைப் பார்த்துச் செல்கின்றனர் | Timeline Photosசீரமைப்புப் பணியின் போது தெரியவந்த ஸ்ரீரங்கம் கோயில் நூறு கால் மண்டபம் By dn, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம... |
இன்றைய தினமணி விமர்சனம் |
|
No comments:
Post a Comment