Saturday, 20 September 2014

இன்று முதல் புரட்டாசி சனி கிழமை , நாம் எல்லோரும் சேர்த்து கோவிந்தனை கூப்பிடுவோம !!!!

இன்று முதல் புரட்டாசி சனி கிழமை , நாம் எல்லோரும் சேர்த்து கோவிந்தனை கூப்பிடுவோம !!!!
கோவிந்தா , ஹரே , கோவிந்தா , கோகுல நந்தன கோவிந்த 
கோவிந்தா ஹரே கோவிந்தா வேங்கட ரமணா கோவிந்தா 

வேங்கட ரமணா கோவிந்தா , சங்கட ஹரணா கோவிந்தா 
கோவிந்தா , ஹரே , கோவிந்தா , கோகுல நந்தன கோவிந்த 

இந்த நன் நாளில் படிப்போமா !!!
நாலாயிர திவ்ய பிரபந்தம் - குலசேகரப் படி
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
------------------------------------------------------------------------------------------------
செடியாய வல்வினைகள் = செடி என்றால் பாவம் என்று ஒரு பொருள் உண்டு. செடி போன்ற, சிக்கல் நிறைந்த, ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கும் படியான வல் வினைகள்.

தீர்க்கும் திருமாலே = அந்த கொடிய வினைகளை தீர்க்கும் திருமாலே

நெடியானே! = உயர்ந்தவனே. உலகளந்த பெருமாள் அல்லவா அவன்.

வேங்கடவா! = திரு வேங்கட மலையின் மேல் உறைபவனே

நின்கோயி லின்வாசல் = உன்னுடைய கோயில் வாசலில்

அடியாரும் = அடியவர்களும்

வானவரு மரம்பையரும் = வானவரும், அரம்பையரும்

கிடந்தியங்கும் = கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே= படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே

இன்றும் கூட பெருமாள் கோயில் படிகளை "குலசேகரப் படி " என்று கூறும் வழக்கம் உள்ளது.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator