சிவ கீதை
ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது.
இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார்.
இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் பின்பற்ற வேண்டிய சிவநெறியாகவும், இறைவழிபாடு, இயற்கை வழிபாடு என்னும் பேருண்மையை உலகிற்கு உணர்த்தியும், மேலும் சிவபூஜா முறைகளை அருளிச் செய்திருக்கிறார்.
திரேதாயுகத்தில் நடைபெற்ற புராணச் சான்றாகும். துவாபரயுகத்தில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு அருளிச் செய்த பகவத் கீதைக்கு முந்தைய காலத்தே நடந்தது. சிவகீதை இராம் அவதாரத்தில் பெற்றது என்றும், கிருஷ்ணர் அவதாரத்தில் கொடுத்தது என்றும், கிருஷ்ணர் தாம் பகவத்கீதையில் "சிவோகம்-பாவனை" செய்கின்ற போது தம்மை பரமாகக் கூறினார் என்பதை அவருடைய சரித்திரங்களில் காணலாம்.
சிவகீதையில் சூதமுனிவர் தனது சீடர்களுக்கு உபதேசித்த காலத்தில் இதைக் கேட்டாலும், படித்தாலும், சிவசாயுச்சியம் கிடைக்கும் என்று உரைத் தருளினார்.
சிவகீதையை முன்னர் புலோலி சிவஸ்ரீ ம.முத்துக்குமாரசாமி குருக்கள் அவர்களாலும், நல்லூர் தா. கைலாசப் பிள்ளை அவர்களாலும் ஆனந்த வருடம் ஆங்கிலம் 1914-ல் வெளிவந்துள்ளது. தற்போது சிவஸ்ரீ அ.சொர்ண சுந்தரேசன், தேவகோட்டை மற்றும் திருவாடானை சிவஸ்ரீ சொ. சந்திரசேகர குருக்கள் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
இது
திருவரசு புத்தக நிலையம்,
13, தீனதயாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை-600 017
மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment