Wednesday 24 September 2014

அம்மா பால் .......!

அம்மா பால் .......!

அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவான பாலைப் பற்றிய சில தகவல்கள்: 

நம்பிக்கை: கறந்த பாலை அப்படியே குடிக்க வேண்டும்.

உண்மை: பாலைக் காய்ச்சுவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே தான் உள்ளன. சில கிறுமிகளை அழிக்க இது உதவும்.
=================
நம்பிக்கை: தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள கொழுப்பு குறையும்

உண்மை: தண்ணீர் கலப்பதால் அதன் அடர்த்தியே குறைகிறது. ஊட்டச் சத்துக்களின் அடர்த்தியும் குறைகிறது.
==================
நம்பிக்கை: பால் குடிப்பதால் குண்டாகி விடுவோம். 

உண்மை: இது சரி அல்ல. குண்டாவதை தடுக்கும் சில சத்துக்கள் பாலில் உள்ளன. 

================= 
நம்பிக்கை: பால் குடிப்பதால் ரத்த கொதிப்பு (BP)அதிகமாகி விடும். 

உண்மை: இதுவும் உண்மை அல்ல. ரத்தக் கொதிப்பை கம்மி ஆக்கும் திறன் பாலிடம் உள்ளது.

=================
நம்பிக்கை: குழந்தை பருவத்தில் மட்டும் பால் குடித்தால் போதும். 

உண்மை: எல்லா வயதிலும் தேவையான கால்ஷியம் சத்திற்கு அனைவரும் பால் குடிப்பது அவசியம்.
================= 

நம்பிக்கை: குழந்தைகளுக்கு பால் பவுடரை விட மாட்டுப் பால் சிறந்தது.

உண்மை: ஒரு வயது வரை ஃபார்முலா பவுடர் பால் மாட்டுப் பாலை விடச் சிறந்தது. மாட்டுப் பாலில் உள்ள கொழுப்பு சற்று ஜீரணிக்க சிரமம்.

=================
நம்பிக்கை: பால் ஒரு முழுமையான உணவாகும்.

உண்மை: பாலில் இரும்புச் சத்தும், சில விடமின்களும் இல்லை. ( விட்டமின் சி, டி, இ, கே )

=================
நம்பிக்கை: பாலில் உள்ள ஊட்டச் சத்துக்கள் போல் பல உணவுப் பொருட்களிலும் உள்ளது. 

உண்மை: பாலில் உள்ள கால்ஷியம் சத்து எளிதாக உடலில் எலும்பு வளர்ச்சிக்குப் பயன் படும். தானியங்களிலும், இலைகளிலும், விதைகளிலும் உள்ள ஊட்டச் சத்துக்கள் அவ்வளவு எளிதானவை அல்ல.

=================
நம்பிக்கை: பாலின் கொழுப்பை எடுப்பதால் அதில் உள்ள சத்துக்களும் குறைந்து விடுகிறது.

உண்மை: அவ்வாறில்லை, கொழுப்பை எடுப்பதால், அதன் கலோரிகளே குறைகிறது. சத்துக்கள் அப்படியே தான் இருக்கும்.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator