பெரியவா சரணம்.
அற்புதத் தரிசனமும் அடியேனும் கண்டேன்
அன்புறவு அனைவர்க்கும் அருகாகச் சொல்வேன்!
ஆச்சார்யன் அருளதனைக் கொண்டேன் - அதனை
ஆத்மார்த்தமாகவே அனைவர்க்கும் சொல்வேன்!
ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர...
சிவ சிவ சங்கர... குரு குரு சங்கர...
சென்ற வெள்ளியன்று மஹாஸ்வாமி பக்தரொருவரைக் காண மஹாலிங்கபுரம் சென்றேன். அருமையான சத்சங்கம் முடித்து திரும்ப எத்தனிக்கையில் எனது மோட்டார் வண்டி கிளம்ப மறுத்தது. எவ்வளவோ முயன்றும் வண்டி கிள்ம்பிய பாடில்லை. எனவே அவரது அறிவுரைப்படி எனது வண்டியை அவரது வீட்டிலேயே விட்டுவிட்டுஅவரது வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன். சனிக்கிழமை காலையில் நண்பரிடமிருந்து செய்தி. காலையில் வண்டியை சரிசெய்ய கிளம்பும் முன் ஒரு முறை உதைத்துப் பார்க்கலாமே என முயன்றுள்ளர். வண்டி கிள்ம்பிவிட்டதாம். ஏதோகாரணம் கொண்டே நேற்று அப்படி நடந்துள்ளது என்றார்.
சனிக்கிழமை மாலை அவரது வீட்டுக்குச் சென்று வண்டியைப் பெற்றுக் கொண்டேன். மேற்கு மாம்பலம் வழியாக உள்ளகரம் செல்ல முடிவு செய்து அவ்வழியே சென்றேன். வழியில் அயோத்யா மண்டபத்தில் ஶ்ரீமான் பிச்சை ஐயர் சுவாமினாதன் அவர்கள்து ஶ்ரீமஹாபெரியவா மகிமை சொற்பொழிவு. மண்டபத்தின் பக்கவாட்டு நுழைவாயிலருகே வண்டியில் இருந்தபடியே அமுதமொழிகளை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு திகைப்பு. எதிரே வந்த ஒரு அம்மையார், தோ பாருங்கோ... இங்க நிக்காம அப்படியா போங்கோ" என மெயின்ரோட்டைக் காண்பித்தார். வண்டியை நகர்த்தியவன் ஏதோ எண்ண்யவாறு கிள்ம்பிவிட்டேன்.
போஸ்டல் காலனியில் சாலையோரத்தில் மாதுளம்பழம் விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டு, ஆத்துல பெரியவாளுக்கு நைவேத்யம் பண்ணினா நன்னாருக்குமேன்னு தோன்றியதால் நிறுத்தி வாங்கினேன். பைக்குள்ளிருந்த மொபைலை கையில் எடுத்துவிட்டு பணமெடுக்கலாம்னு எடுத்தேன். மொபைலில் மெஸஞ்சரில் முகனூல் நண்பர் ஒருவரது பெயர் தெரிந்ததும், "ஆஹா, இவர் வீடு அசோக் நகர் தானே... ஶ்ரீ ஆச்சார்ய வந்தன மாலா அவருக்கு அனுப்பியது கூரியர ர்ிட்டர்ன் ஆயிடுத்தே... அவா ஆத்துக்கே போய் கொடுத்துடலாம்னு அந்த நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுஅவரது வீட்டினை அடைந்தேன். அவருக்கு மஹா சந்தோஷம். அவரது வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும் புஸ்தகம் கொடுத்து ஶ்ரீ குஞ்சிதசங்கரம் படத்தினையும் அளித்தேன். அவர்கள் மிக்க சந்தோஷமடைந்ததோடு மேற்கு மாம்பலத்தில் குடி கொண்டுள்ள காளிமாதா கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டுப் போகும்படி மிகவும் வற்பு்ரு்த்தியதோடு நில்லாமல் என்னை அவர்கள் கூடவே அழைத்தும் சென்றானர்.
பெரியவா... என்ன நடக்கற்து இங்கே... சமீபத்தில ஓர் உயிரை இழந்துள்ளேனே... த்வஜஸ்தம்பம்தாண்டி கோவிலுக்குள் நுழையும் பாக்கியமற்ற நிலையில் உள்ள என்னை இவர்கள் அம்பாள் கோவிலுக்கு அழைத்துப் போய்கொணிருக்கின்ற்னரே... என நினைந்த வண்ண்ம் அவர்களது வணியைப் பின் தொசர்ந்துசென்று கொண்டிருந்தேன்.
அந்த கோவிலில் நுழையும் போது அந்த விருந்தினரிடம் மெதுவாக விசாரித்தேன். "நீங்க வாங்கோ, சாணூஜி. அம்பாளை முதலிக் தரிசனம் ப்ண்ணுங்கோனு உள்ளே அழைத்துப் போயினர்.
சகல லோகத்தையும் ரக்ஷிக்கும் அம்பாளை ஆத்மார்த்தமாக. தரிசனம் செய்துவிட்டு நகர்ந்தேன். "வாங்கோ, இனிமேதான் முக்கியமான தரிசனமே" எனக் கூறி உள்ளே சென்ற்வர்களைப்பின் தொடர்ந்து அங்கே கொலுமண்டபத்தினுல் நுழைந்தவன் கண்களில அனந்தக் கண்ணீர்!
ஆம்! தில்லை நடராஜ பெருமான் கொலுமணபத்தின் மையத்தில்! அவருக்கு முன்னமாய் காளி!
நான் மிகச் சிறு வயதில் தில்லை சென்ற் ஞாபகம். குஞ்சித சங்கரனை (பெ்ரி்யவா) மட்டுமே தரிசனம் கண்டவன் நான். ஆனந்தமாய் அன்பர்கள் அனைவருக்கும் கடந்த ஒன்பது மாதங்களாக எல்லா இடங்களிலும் வினியோகம் செய்வதிலே ஆனந்தித்து வந்தவனுக்கு அற்புதமான பேரருள்.
அங்கே நடராஜரின் வலைந்து அழகாக இருந்த பாதத்தில் குஞ்சிதபாதம சார்த்தப்பட்டிருந்தது. முதன்முதலாய் தரிசிக்கிறேன். ஆனந்தம்!
அதைவிடவும் பேரானந்தமென்னதெரியுமா...?
அந்த இருவரிடமும் நான் அனைவருக்கும் கோவிலில் வினியோகிக்க வேண்டி கொடுத்திருந்த குஞ்சித சங்கரம் படத்திலிருந்து ஒன்றுஎடுத்து நடராஜர் பாதத்திலிருந்தகுஞ்சிதபாதத்தின் மேல் வைத்தனர்.
அதுமட்டுமா...! அருகிலிருந்த ஒரு அம்மையார் எனது கரங்களில் வில்வங்களாத் தந்துபெரியவாளுக்கு சார்த்துங்கோ, சாணுஜி என்றார். கைகள் நடுங்க பெரியவா சரண்ம் பெரியவா சரணம் என புலம்பியவண்ணமாய் வில்வதளாங்களை சார்த்தினேன்.
ஆஹா! பேரானந்தம். அங்கே சுவாமினாதன் அவர்கள் கூற்யது நினைவில் ஓடியது. மனசார சரண் அடைந்தவாளை பெரியவா பாத்துப்பா. ஆம்! அவரே பாத்துக்கரார். ஈச்வரனையும் அம்பாளையும் கோவிலுக்குள் சென்று தரிசித்தேன். ஆம். அந்த கோவிலில் த்வஜஸ்தம்பம் இல்லை. கொலுவீர்றிருந்த ஈஸ்வரன் ஈஸ்வரியுடன் குஞ்சிதசங்கரன் தரிசனம்.
குஞ்சிதபாதத்தின் ( நடராஜர் )
குஞ்சிதபாதத்தில் (வலைந்த பாதம்)
குஞ்சிதபாதத்கின் மேல் (தில்லையில் நடராஜருக்குசார்த்தப்படும் வேர்களால் ஆன மாலை) வீற்றிருந்த குஞ்சிதசங்கரருக்கு வில்வம் சார்த்தி தரிசிக்கும் பாக்கியம்.
நினைத்துப் பார்க்கின்றென்... வண்டி ரிப்பேர் ஆகி, அதனைத்தர மறு நாள் சென்ற்வன்... அயோத்யா மண்டபத்தில் தி்ருவாளரது சொற்பொழிவுக்காய் நின்று... அங்கு ஒரு அம்மையாரின் குரலால் நகர்த்தப்பட்டு... முகனூல் நண்பர் வெகு நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லோக புத்தகத்தைத் தரச் சென்றாவனுக்கு இப்படி ஒரு பாக்கியம்.
ஆம்! எந்தன் ஒவ்வொரு. நிமி்டத்தையும் ஒவ்வொரு நிகழ்வையும் பெரியவா பாத்துக்கறானு மனசுல ஒரு புது தெம்பு.
ஒவ்வொரு நாளூம் எழுதிவரும் தோத்திரப் பாடல்களை படிக்கும் ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் நிறைந்திருக்கும்படியான ஶ்ரீமஹாஸாமிக்கு நன்ற்யோடு நடந்ததைப் பகிர்ந்த த்ருப்தியோடு அந்த பரமேஸ்வரனின் தரிசனத்தை அந்த ஜீவர்களுக்கும்ப்செய்து வைத்த த்ருப்தி எனக்கு!
குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோக நிவாரணம்.
பெரியவா கடாக்ஷம்.
நமஸ்காரங்களுடன்
சாண் புத்திரன்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment