நம்பினால் நம்புங்கள்!
*தூசுகளையும் அழுக்குகளையும் விரட்டி விலகச் செய்யும் புதுமையான பெயின்ட்டை ஜப்பானின் நிஸான் நிறுவனம் தயாரித்துள்ளது.
'அல்ட்ரா-எவர் ட்ரை' என்றழைக்கப்படும் இந்த சூப்பர்-ஹைட்ரோபோபிக் பெயின்ட் எல்லா கார்களிலும் பூசப்பட்டால், கார் வாஷ் செய்பவர்கள் வேறு வேலை தேட வேண்டியிருக்கும்!
*மனிதத் தலைமுடியை விட ஒரு லட்சம் மடங்கு மெலிதான சூப்பர் மெட்டீரியலை ஸ்வீடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதைக் கொண்டு, மிக மிக மிக எடை குறைவான வாட்டர் புரூஃப் துணிகளைத் தயாரிக்கலாம்.
*பெரிய அளவிலான கேஸ் கசிவைத் தடுக்க பாக்டீரியாக்களைப் பயன்படுத்தலாம் என ஈஸ்ட் ஏஞ்சலியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
*மனித சருமத்தின் வெளிப்புறத்தோலை (எபிடெர்மிஸ்), ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ மெடிக்கல் சென்டர் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
இதன் மூலம் பல்வேறு சருமக் குறைபாடுகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
*ஹெச்.டி., டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பம் எல்லாம் பழசாகும் காலம் மிக விரைவிலேயே தென்படுகிறது.
பனிப் புகையிலேயே 3டி உருவங்களை விரல்களைக் கொண்டே உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தை பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
*சிக்கன் மற்றும் இறைச்சியை பாக்டீரியா தாக்குதலில் இருந்து 3 வாரங்கள் வரை பாதுகாக்கக்கூடிய ஃபிலிம் உறையை பென்சில்வேனியா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஃபிலிமும் சாப்பிடக்கூடிய பொருள்தான்!
*இன்டர்நெட் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மிகச் சிறிய போட்டோன் ஸ்விட்ச் ஒன்றை ஹார்வர்டு விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர்.
மின்சாரத்தின் துணையின்றி, ஒளியை மட்டுமே பயன்படுத்தி, பாதுகாப்பான இணைய இணைப்பை இதன் மூலம் அளிக்க முடியும்.
*ஜீன் தெரபி மூலம் செவி நரம்புகளைப் புதுப்பிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
இதனால் காது கேளாமையை மட்டுமல்ல... பார்கின்சன்ஸ் நோய் மற்றும் மனச்சோர்வுப் பிரச்னைகளையும் சரி செய்ய முடியும்.
*அதிகமாகச் சாப்பிடும் பழக்கத்தை, 'அசிடேட்' பயன்படுத்தி குறைக்கலாம் என சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் விரைவிலேயே வரப்போகிறது அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கான மாத்திரை!
*ஆப்டிகல் லென்ஸ் ஒளியைப் பிரதிபலிப்பது போலவே, மின்காந்த அலைகளைப் பயன்படுத்தும் முறையை சவுத் ஈஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது செயல்பாட்டுக்கு வரும்போது, மொட்டை மாடிகளில் காணப்படும் அத்தனை ஆன்டெனாக்களின் அளவும் வடிவமும் மாறிவிடும்!
(இந்தப் பத்தும் எதிர்காலத்தைச் செதுக்கக்கூடிய கண்டு பிடிப்புகள்...) |
No comments:
Post a Comment