நோய்க்கான மருந்து
மூக்கிரட்டை கீரை, ஆவாரம்பூ (ம)இலை, கொத்துமல்லி இலை- இவை மூன்றும் அரைத்து தினமும் 1 அவுன்சு உண்டு வர சிறுநீரகம் சுத்தமாகும். பழுதான சிறுநீரகமும் வேலை செய்யும். கஜூர் காய் (காய்ந்தபேரீச்சம்பழம்) பாலில் இட்டு தினமும் குடித்து வரஇரத்த சோகை குணமாகும்.
மஞ்சள் கரிசல் கீரையை நீரில்இட்டு தலை முடிக்கு தடவி வர தலை முடி பலம் பெரும்.
ஆஸ்துமா
வெள்ளை எருக்கு பூ காய்ந்தது, சுக்கு,மிளகு ஆகியவைசேர்த்து தூளாக்கி சாப்பிடும்போது ஆஸ்துமா முழுவதுமாக குணமடையும். காட்டுஏலம், ஏல அரிசி இவை தூளாக்கி சாப்பிடும் பொழுது குணமாகும். நெருஞ்சி முள் தூள், கொள்தானியம் இவை சிறுநீரக கற்களை கரைக்க கூடியது.
மலச்சிக்கல்
களச்சி பருப்பு, பெருங்காயம் சாப்பிடலாம், திரிபலா சாப்பிடலாம்.
நெறிகட்டுதல்
அதிகமாக குளுமை தரும் பொருள்கள், அடிக்கடி தலை குளித்து வர குணமாகும். களச்சிபருப்பு இதனுடன் 5-மிளகு, பெருங்காயம்சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும். கொழுப்புக்கட்டி
இருபுறமும் நகருதல் கை வைத்து அழுத்தும் பொழுது. இது மேல் தோலுக்கும் உள்தோலுக்கும் இடையில் உருவாக கூடியது. அவுரியும் பாலும் சேர்த்து சாப்பிடும் பொழுதுகுணமாகும்.
முகப்பரு
வெற்றிவேர் தூள், கடுக்காய் தூள் இரண்டும் தேங்காய் எண்ணையுடன் சேர்த்து பசைசெய்து பூசலாம். மீண்டும் வராது. துளசி இலை, எலுமிச்சம் பழம் இவை இரண்டையும்சேர்த்து முகத்திற்கு தடவி வரமுகப்பரு குறையும். சீரகம்
இரத்த அழுத்தம் குறையும்.
vவெற்றிலை, சிவப்பு ரோஜா, லவங்கம்,எலுமிச்சை தோல் இவற்றை சம அளவு எடுத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை–மாலை 1-அவுன்சு உள்ளுக்கு சாப்பிடும் பொழுது ஒவ்வாமைகுணமாகும். நுரையீரல் பலம், மலச்சிக்கல் குணமாகும். சிறுநீர் தாரை எரிச்சல்குறையும். 3– வயதிற்க்கு மேற்பட்டோர்
ஓம உப்பு, கற்பூரம், தேன் மெழுகு இவை மூன்றும்கலந்து பல்வலி, மற்றும் உடல்வலிக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு
தேங்காய் எண்ணையுடன், கற்பூரம் சேர்த்து சூடு செய்து குழந்தையின் மார்பின்மீது தடவினால் மார்பு வலு பெரும். புங்க எண்ணெய்
வீக்கத்தை கரைக்கக்கூடியது.
வேப்ப எண்ணெய்
சொறி, படை, புண் ஆறும், பாத வெடிப்பு.
சேற்று புண்
மஞ்சள், தேங்காய் எண்ணெய் குழைத்து மேலே தடவவேண்டும்.
வேப்ப எண்ணெய், புங்கஎண்ணெய், விளக்கெண்ணெய் 1௦ - 15 சொட்டு குடித்து வரமுடக்கு வாதம் குணமாகும். கிச்சிலி இலையுடன் சர்க்கரைசேர்த்து குடித்து வர ஸ்கர்வி நோய்குணமாகும்.
சர்க்கரை நோய்
காலை – மாலை 5 – நித்திய கல்யாணி பூ உண்டு வரசர்க்கரைநோய் குணமாகும். பாகற்காய் இலையின் சாற்றை குடிக்கும் பொழுது சர்க்கரை நோயின்அளவு வெகு சீக்கிரத்தில் குறையும். நாவல் கொட்டை சூரணம், மஞ்சள், கருஞ்சீரகம்,வெந்தயம், சிறுகுறிஞ்சான் சம அளவு சேர்த்து தூளாக்கி உண்டு வர முழுவதும் குணமாகும் சுண்டைக்காய் ,அன்னாசிப்பழம், அகத்திக்கீரை மூன்றும் சேர்த்து சேர்த்து உண்டு வர வயிற்றைவலித்து வெளியாகக்கூடிய மலம், சாப்பிட்ட உடனே வெளியாகக்கூடிய நோய் குணமாகும்.
வெங்காயம், வெந்தயம், தயிர்இவற்றை அரைத்து தலையில் வைத்து கட்டி வர தலையில் பூச்சியின்மை, முடிவளரும். கொத்துமல்லி, சுக்குபொடி,பனைவெல்லம் இவற்றை காய்ச்சி குடிக்கும் பொழுது இரத்தம் சுத்தம் ஆகும்.
பூசணிக்காய் கூழ்,செம்பருத்திப் பூ(ஒற்றை இதழ்) இதழ் இவற்றை கஷாயமாக வைத்து குடிக்கும் பொழுதுசிறுநீரகம் பலம் பெரும், வயிற்றுக்கடுப்பை போக்கும். மந்தா இலையுடன் 5- மிளகு கஷாயமாக வைத்து காலை–மாலை குடித்து வரஅதிகமாக நின்றால் "வெரிக்கொஸ்பெயின்" வரும் நோய் குணமாகும்.
காய்ந்த தோல் போன்ற தோற்றம் மாற பச்சைபயிருடன் காய்ந்த பழத்தோலை(மாதுளை, எலுமிச்சம்)அரைத்து உடல் மீது பூசி தேய்த்து குளிக்கலாம். நாவல்பழம்
சதை சீதபேதிக்கு மருந்து. கொட்டை சர்க்கரை நோய்க்கு அரு மருந்து.இரத்ததை நிறுத்தக்கூடியது.
விழாம்பழம்
பித்தத்தை வெளியேற்றும், இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது.
கலாக்காய்
வாயுவை வெளியேற்றக்கூடியது. வெல்லம் பானகம் சிறுநீர் தாரைஎரிச்சல் குணமாகும்.
பச்சைபயிறு, யானை நெருஞ்சி(முட்கள்),நித்திய கல்யாணி, மூக்கிரட்டை இவற்றை கஷாயமாக வைத்து காலை–மாலை குடித்து வர உடல்வலுபெரும்.
கழுத்து எலும்பு தேய்மானம் குணமாக பேரிச்சம், திராட்சை, கருவேப்பிலை சற்று அதிக அளவில் உண்டு வரகுணமாகும். அல்சர்
உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு சத்து குறைய முட்டை கோஸ் சாறு, மிளகு தூள்,ஏலக்காய் தூள் கலந்து குடிக்கலாம்.கண்புரை, புற்று நோய் குறையும்.
அக்கி கொப்புளம்(சூடுகொப்புளம்)
வெற்றிலை, மா-இலை, மணத்தக்காளி இலை ஆகியவற்றைமேல்பூச்சாக பூசும் பொழுது கொப்புளம் குறையும். 5–6 – உப்பு வெற்றிலை நசுக்கி இந்து உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கஷாயமாக வைத்து குடித்துவர யானைக்கால் நோய், ஜுரம் குறையும்.
இஞ்சிசாறு, தேன், வெற்றிலை சாறுகாலை–மாலை குடித்து வர இருமல், சளிகுணமாகும்.
வெற்றிலை சாறு, தேன் கலந்துகண் இமைக்கு பூசுதல். இதனால் கண் இமை பொங்குதல் குணமாகும். தொண்டை வலிக்கு
வெற்றிலை சாறு சுண்ணாம்பு சேர்த்து தொண்டையின் மீது பூசினால் குணமாகும்.
பக்கவாதம்
வல்லாரை பொடி, மஞ்சள் பொடி, வசம்பு, திப்பிலிஆகியவை சேர்த்து காலை–மாலை ஒரு வெருகடி அளவு சாப்பிட்டு வர பக்கவாதம் குணமாகும். விரைவாதம்
களச்சிக்காய், மிளகு-5 சேர்த்து மேல் பற்றாகபோடலாம்.
ஈரல் வீக்கம்
வெள்ளரி பழம் விதை, ஏல அரிசி, தேநீராக வைத்து காலை–மாலைகுடித்து வர சிறுநீர் வெளியேறும். இவற்றுடன் மிளகு (அ) பனைவெல்லம் சேர்த்துகொள்ளலாம். ஏல அரிசி(1/2-ஸ்பூன்) , சுக்கு(1/2), சீரகம்(1/2), லவங்கம் (7), 1-டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
இதனால் வயிற்று பிடிப்பு, அல்சர்,வயிற்று புண், பல் சொத்தை, வாய் நாற்றம் போகும்.
எரிச்சல்
வெட்டிவேர், சோம்பு, பனைவெல்லம், மூன்றும் சேர்த்துதேனில் ஊர வைத்து காலை–மாலை உண்ணலாம். சிறுநீர் எரிச்சல், சொட்டு மூத்திரம், பாதஎரிச்சல், உடல் எரிச்சல் குணமாகும்.
கீழ்காய் நெல்லி,சிறுநெருஞ்சிஇரண்டையும் தூளாக்கி காலை–மாலை 1-ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிடலாம். தோல் வியாதி
நுனால் மரத்தின் இலையை அரைத்து மேல் பூச்சாக பூசவேண்டும்.
குழந்தைகளுக்கு(1-வயது) தோல் வறட்சி (படைபோன்ற நிலை, கட்டு கட்டாக இருத்தல்) பெரியவர்களும் உபயோகப்படுத்தலாம்
கருஞ்சீரகம், திரிபலா, அருகம் புல் இவை சம அளவு எடுத்துக்கொண்டு வெருகடி அளவுகாலை–மாலை உள்ளுக்கு குடிக்கின்ற பொழுது உடலில் உள்ள புண்கள், நச்சுத்தன்மைவெளியேறும், இரத்தம் சுத்தம் ஆகும். மேல் பூச்சாக பால்முக்ரா எண்ணெய்(நீரடி முத்து எண்ணெய்), இதனுடன் வேப்பஎண்ணெய் இரண்டையும் சேர்த்து மேல் போச்சாக உபயோகப்படுத்தலாம்.
அருகம் புல், நல்வேலை (கடுகு போன்று காய்த்து வெண்மை நிற பூக்களை உடையது) எடுத்து தேங்காய்எண்ணெய்யில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து மேல் பூச்சாக உபயோகப்படுத்தலாம். டி.பி (T.B.)
கசகசா இரண்டு ஸ்பூன் எடுத்து அதை பாலுடன் ஊறவைத்துகாயிச்சி குடித்தால் நோய் குணமாகும்.
குதிக்கால் எலும்புவளர்ச்சிக்கு
கால்சியம், சப்போட்டா, சீதாபழம், முட்டைகோஸ்சாப்பிடலாம். முக்கூட்டு எண்ணைய் (வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய்)1௦- சொட்டுகள் உள்ளுக்கு தினசரி சாப்பிடவும். மாதவிலக்கு , இடுப்புவலி
புதினா, மஞ்சள் தூள், கடுகு கஷாயமாக வைத்துகுடித்தால் குணமாகும்.
கை, கால் மரத்து போதல் சுடுதண்ணீரில் 5-சொட்டு தேன் விட்டு சாப்பிட்டால் குணமாகும்.
கை, கால் வீக்கம்
அழுத்தினால் பள்ளம் விழுவது இவற்றுக்கு தனியா,சோம்பு இரண்டையும் கஷயாமாக வைத்து குடிக்கலாம்.
அஷ்வகந்தி (ஆமுக்கரா சூரணம்)
எலும்பு பலம் தரும்.
மரு, சிவப்பு பரு (பால்உண்ணி)
அம்மான் பச்சை அரிசி பாலை எடுத்து மருக்களின் மீதுதடவுகின்ற பொழுது மருக்கள் கரையும். அரிப்பு
உடல் உறுப்பில் ஏற்படுகின்ற அரிப்புக்கு திரிபலாவை நீருடன் கொதிக்க வைத்து ஆறவைத்து அரிப்பு உள்ள இடத்தில் கழுவி வந்தால் குணமாகும்.
உள்ளுக்கும் வெருகடி அளவுசாப்பிடலாம்.
கொத்து மல்லி சாற்றையும் பூசலாம். உடல் எடையை குறைக்க
மிளகு, சீரகம், லவங்கம், லவங்க பட்டை இவற்றைதூளாக்கிகொண்டு காலை வெறும் வயிற்றில் 1-ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதை நன்றாக கொதிக்க வைத்து குடிக்கும்பொழுது உடல்எடை குறையும்.
அடிக்கடி மலம் வெளியாதல் அடிக்கடி மலம் வெளியாதல். இரத்தம் இல்லாமை, இரத்த சோகை,உடல் எடை கூடாமை – இவற்றுக்கு மாங்கொட்டை சூரணம் அரைத்து தூளாக்கி உணவாக உட்கொள்ளலாம்.
யானை நெருஞ்சி இலையை இரவு வேலையில் கஷாயமாக வைத்து உட்கொள்ளலாம்.
மாதவிடாய்
களச்சிக்காய் ஒரு பருப்பு, 5- மிளகு இவற்றை தூளாக்கி காலை–மாலைஉணவாக உட்கொள்ளலாம்.
எந்த வகை மாதவிடாய் பிரச்சினை குணமாகும்.
மாதவிடாய் ஏற்படுகின்றபொது உதிரப்போக்கு, வயிற்று வலி ஏற்படுதல் போன்றவை குணமாகும். பேரீச்சம்பழம்,திராட்சை போன்ற இரும்புச்சத்து உள்ள பொருட்களை சாப்பிட்டு வர குணமாகும்.
(வலிநீங்க புதினா, மஞ்சள், களச்சிக்காய் இவற்றை கஷாயமாக வைத்து குடித்து வர குணமாகும்).
vபேன், பொடுகு à மிளகு, பூண்டு இவற்றை நல்லெண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து தலைக்கு தேய்த்துகுளிப்பது. vமறதி à வல்லாரை, மஞ்சள், வெந்தயம், நெல்லிவற்றல் இவற்றை பொடித்துக்கொண்டுகாலை–மாலை உண்டு வர குணமாகும்.
கண்ணத்தில் ஏற்படுகின்ற கரும்புள்ளி
எலுமிச்சம்பழ தோலின் உள்பக்கத்தை எடுத்துக்கொண்டு கரும்புள்ளியின்மீது தேய்க்கும் பொழுது கருபுள்ளிகள்குறையும். தக்காளி சாறு அல்லது உருளைக்கிழங்கின் வில்லைகளை வைத்து தேய்த்தால் கரும்புள்ளிகள் போகும்.
மூச்சு முட்டுதல்
வெற்றிலை, மிளகு, சீரகம் இவற்றை கஷாயமாக வைத்து குடிக்கும் பொழுது குணமாகும்.
பன்னீர் ரோஜா, சாத்துக்கொடி தோல், லவங்கம்,வெற்றிலை இவற்றை கஷாயமாக வைத்து குடிக்கும் பொழுது குணமாகும். நீர் சத்து குறைபாடு
குழந்தைகளுக்கு உச்சந்தலையில் குழி விழுந்தால் நீர் சத்து குறைபாடு உள்ளது.
இதற்க்கு ½ - டம்ளர் நீரில்1-ஸ்பூன் சர்க்கரை ஒரு சிட்டிகைஉப்பையும் சேர்த்து நன்றாக கலக்கி கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவைக்கலாம். கொலஸ்ற்றால்", இரத்தஅழுத்தம்
தினமும் இரவு 5-பல் பூண்டு, மஞ்சள் தூள், இவற்றுடன் பால் சேர்த்துகுடித்து வர குணமாகும்.
புகை பிடித்தல், மதுஅருந்துதல்
இந்த மது அடிமை துளசியை சாப்பிடலாம். வெற்றிலை, மிளகு இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும்பொழுது இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை குறைக்கக்கூடியது. -- |
No comments:
Post a Comment