முயற்சி திருவினையாக்கும்
அவன் ஒரு சமூக தொண்டன். பிரபல கட்சியின் கடின உழைப்பாளி. இரவு 2, 3 மணி வரை கட்சி போஸ்டர் ஒட்டுவதில் இருந்து சமூகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முன் நின்று போராடும் போராளி. தன் தலைவனை யார் எது சொன்னாலும் கோவம் வந்து பேசிவிடுவான்.
ஒரு தடவை அவனுக்கு விபத்தில் கால் ஊனமாகிவிட கட்சியில் இருந்து சிலர் வந்து அனுதாபமாக சில பார்வைகள் வீசிவிட்டு சென்றுதோடு கட்சி உறவு தொடர்பற்று போயிற்று.
அன்று அவனின் ஐந்து வயது மகளுக்கு நல்ல காய்ச்சல் போட்டிருந்ததால் அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தான். வரிசையில் நிற்கும் போது அங்கே அவன் கட்சி தலைவர் ஒரு திறப்பு விழாவிற்கு வருவதாக கேள்விப்பட்டு குழந்தையை மறந்து தலைவனை பார்த்து தன் நிலை சொல்லி ஏதாவது உதவி கேட்கலாம் என்று போகிறான்.
தலைவன் வரும் வரை காத்திருந்து தலைவன் வந்ததும் கடவுளை கண்ட மகிழ்ச்சியில் தலைவனை நோக்கி அவன் போக, பாதுகாவலர்கள் அவனை உள்ளே விடவில்லை. கட்சி ஆட்கள் பக்கத்தில் நின்றும் அவனால் உள்ளே போக இயலவில்லை. தலைவரை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் வேண்டுதல் ஆத்திரம் கட்சி ஆட்களுடன் வந்த வாக்குவாதம் இவை அனைத்தும் சேர, தலைவரை தாக்க முற்பட்டதாக அவனை உள்ளே போட்டு விடுகிறார்கள்.
காவலர்கள் அவனை அழைத்துச்செல்லும் போது அவன் மகள் மனைவி ஞாபகம் வருகிறது. தான் கட்சிக்காக உழைத்தது ஞாபகம் வருகிறது.
அப்போது அவன் ஒரு சபதம் எடுக்கிறான்.... எல்லாருடைய வேஷமும் தெரிந்து விட்டது இனிமேல் கட்சி என்று திரிய கூடாது.இது சுய நலவாதிகள் இருக்கும் இடம் என்பதை புரிந்து கொண்டான்
ஆனாலும் அன்று நடந்த அந்த நிகழ்ச்சி அவனை நிலைகுலையச் செய்து விட்டது.
அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான் . இந்த உலகத்தில் என் கச்சி தலைவன் இப்படிக் கூ ட நடப்பரா ? என்ற ஆச்சரியம் கலந்த சோகத்தில் மூழ்கிவிட்டான் ஒரு வேளை இது கனவாக இருக்குமோ? என்று அவனை அவனே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். இது சாத்தியமில்லைதான். ஆனால் உண்மை. அதை ஏற்று கொள்ளும் பக்குவம் வர வில்லை என்பதை நினைத்துப் பார்க்கையில் பயம் நெஞ்சை கவ்விக் கொண்டது. சபதம் வேறு விட்டு விட்டான்.என்ன செய்வது அடுத்து யோசித்து கொண்டு இருக்கையில்தான்,தான் வீட்டில் இருக்கிறேன் என்பதே அப்பொழுதுதான் அவனுக்கு தெரிந்தது .அழைத்த குரலை கேட்டு , அவன் மனைவி,இப்ப பரவ இல்லைங்க நம்ம குழந்தைக்கு' என்று ஒரு ஆறுதல் வார்த்தை சொன்னாள். அவனுக்கு இப்பொழுது அடுத்து என்ன செய்வது கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாகி விட்டதே நம் நிலை என்று எண்ணி அழுதான். அவன் மனைவிதான் சில தொழில்கள் செய்யலாம் கவலை படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னாள்.
மதிய வேளையில் அரசு மருத்துவமனையின் அருகில் சிறு ஓட்டல் கடை மாதிரி வைத்தால் வயிற்றை கழுவி கொள்லாம் என்று யோசனை சொன்னாள். ஆனால் பணம் எங்கே போவது என்று யோசிக்க , அவன் மனைவி சில தினங்களில் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிய அவன் மனைவி சில சாத வகைகளை சமையல் செய்து பொட்டலமாக கட்டினாள்.அந்த பொட்டலத்தை இருவரும் ஒரு பையில் போட்டு கொண்டு மருத்துவமனையில் அருகில் சத்தமிட்டு மக்களை சாப்பாட்டிற்கு அழைத்தனர் கணவனும் மனைவியும்.ஆனால் யாரும் கண்டுக்கிடவே இல்லை. அவனுக்கு பயம் வந்து விட்டது தெரிந்தவர்களிடம் எல்லாம் மனைவி கடன் வாங்கி வியாபாரத்தை ஆரம்பித்து வேறு ஆகி விட்டது என்ன செய்வது யாரும் வரவில்லையே அப்பொழுது ஒரு முதியவர் ஒரு பொட்டலம் என்ன விலை என்று கேட்டார்.
அவன் வாய் திரைக்கு முன்னே அவன் மனைவி சொன்னாள்.ஏழு ரூவா முதியவர் சென்றவுடன் "ஏன்னா புள்ள எழு ரூவைக்கி தர நம்மக்கு கட்டு படியகுமா" என்று கோபத்துடன் கேட்டான். இல்லைங்கே முதலில் வியாபாரம் பிடிக்க வேண்டுமென்றால் குறைந்துதான் விற்க வேண்டும் என்று "நம்ம தெருவின் முக்கில் பண்ணயார கடை வச்சிருக்கு அல்ல அந்த அம்மாதான் சொன்னுச்சி ' என்னமோ செய் சொன்னான் இவன். அன்று ஒரு சிலரே வந்து வாங்கினார்கள்.பின்பு சில வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர தொடங்கினார்.ஒரு சில ஆண்டுகள் இப்படியே தான் கஷ்டம் அப்புறம் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு இடத்தை வாடகை எடுத்து ஓட்டல் கடை வைத்தனர். அவன் வளர்ச்சி இப்படி போனது அங்கு அந்த கட்சியின் மதிப்பு சரிய தொடங்கியது ஊழல்களால், ஆட்சியும் போனது.இப்படி போயி கொண்டு இருக்க திடிரென அவனுடைய பழைய தலைவர் இறந்து விட்டார் என்ற செய்தி பத்திரிகையில் வந்தது. அவன் கடை வியாபாரத்தை பார்த்து கொண்டு இருந்தான்.அப்பொழுது நண்பர்கள் வந்து தலைவர் இறந்து விட்டார் நீ தொண்டன் அல்லவா கடையை போட்டுள்ளையே என்றார்கள்.
உடனே அவன் சொன்னான்."இது ஒரு மனிதனின் மரணம் அவ்வளவுதான் "என்று நொடி கூட தாமதியமால் சாப்பிட வந்தவர்களை கவனிக்க தொடங்க்கினான்.
அவன் வந்தவர்கள் புரியமால் நின்றனர்???????? |
No comments:
Post a Comment