கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது.
எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்திற்கு அடியேதான் புரட்டி இழுப்பது வழக்கம்.
அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம இலேசாகி விடும்.
துக்கம் என்பதே தன்னைத் தொடாமல் எவன் ஒருத்தன் இருக்கிறானோ அவனே யோகி.
பாபம் அதாவது மனசின் அசுத்தம்தான் துக்கத்துக்குக் காரணம்.
மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும்.
ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும்தான் மனசின் அசுத்தங்களை அகற்ற முடியும்.
குழந்தையாக இருக்கிற காலத்திலிருந்தே இவற்றில் எல்லாம் பழக்க வேண்டும். அப்படிப்பழக்கினால் தான், கோடானுகோடி ஜனங்களை இந்த மாதிரி படிப்படியாக நல்லவர்களாக மாற்றமுடியும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment