பெண்களுக்கு தொடர்ச்சியாக 'மிஸ்ட் கால்' கொடுத்தால் சிறை By Sriram Senkottai, பாட்னா
பீகாரில் பெண்களுக்கு தொடர்ச்சியாக மிஸ்ட் கால் கொடுத்தால் அந்த ஆண்களுக்கு சிறை தண்டனை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பீகார் சிஐடி ஐஜி அர்விந்த் பாண்டே செவ்வாய்க்கிழமை தனது அனைத்து எஸ்.பி.க்களுக்கும், ரயில்வே போலீஸுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், பெண்களுக்கு வரும் தொடர்ச்சியான மிஸ்ட் கால்கள் குறித்த புகார்கள் மிகவும் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியவை என்று அறிவுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கு வரும் தொடர்ச்சியான 'மிஸ்ட் கால்'கள் தீவிரமான பிரச்னை. அது, அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல், அமைதியைக் குலைக்கிறது. இத்தகைய செயலை ஒரு குற்றச் செயலாகக் கருதி, 354D (i) மற்றும் (ii) ஆகிய பிரிவுகளில் பதிவு செய்ய எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
மேலும் பாண்டே இது குறித்து விளக்குகையில், ஏதோ ஒரு முறை அல்லது இருமுறை தவறுதலாக வரும் மிஸ்ட் கால்கள் குறித்து எதுவும் கேள்வி எழாது. ஆனால், தெரிந்து கொண்டே வேண்டுமென்று தொடர்ச்சியாக மிஸ்ட் கால்களாக பெண்களுக்குக் கொடுப்பது என்பது பெண்களுக்கு எதிரான குற்றமாகவே கருதப்படும் என்று கூறியுள்ளார்.
இது குறித்த இரு நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் பள்ளிகள், மகளிர் கல்லூரிகளில் போலீஸார் நடத்தியுள்ளதைத் தொடர்ந்து இத்தகையை முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது |
No comments:
Post a Comment