ஒரு மொழி சிவனுக்கு உரைத்த மெய்ஞான முருகா நீ மறுமொழி பேசுவதும் இல்லையோ!
ஓம் முருகாவென நான் ஓலமிட்டழைக்க ஓடிவந்து அருள்புரிந்தவனே!
ஓஹோ இது என்ன பார்வையோ! முருகா! இது என்ன பார்வையோ! உன் முகம் எனைப்பார்க்க மறுத்தால் மறு முகம் உளதோ?
திருத்தணி மணி விளக்கே!
மருந்து நல்ல மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து,
ஸ்ரீ வைத்தியனாதன் ஈன்றெடுத்த மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து,
நல்ல மருந்து தையல் நாயகி அன்புடன் தழுவும் மருந்து
புள்ளிருக்கு வேளூர் வாழ் செல்வமுத்துக்குமரனின்அருமருந்து (2)
நம்மை வாழ்விக்க வந்த நல்ல மருந்து செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து முருகா.........ஸ்ரீ வைத்தியனாத மருந்து
புள்ளிருக்கு வேளூர் வாழ்செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து.
முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா
மயில் மீது நடமாடி வருவான் முருகன்
மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்
வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன்
கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்
கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்
கைவிட்டு விடுவாயோ என்றேன் (3)
வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்
கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்
கைவிட்டு விடுவாயோ என்றேன் எனை
கைவிட்டு விடுவாயோ என்றேன்
கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முருகன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
முருகா.......................!முருகா..............................!
No comments:
Post a Comment