பழமொழிக்கு ஏற்ப குடிசையில் இருந்தவன் கோபுரத்திற்க்கு போன கதைபோல இந்த பிச்சை காரர் வாழ்விலும் மாணவ-மாணவிகள் ஏற்படுத்தி கொடுத்து உள்ளனர்.பெரம்பூர் ஆர்.நகரில் உள்ள ரங்கநாதன் மாண்ட்போர்ட் மெட்டிரிக்குலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் தான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.ஒரு குழுவாக சேர்ந்து இந்த ஏரியாவில் உள்ள 30 பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
அந்த ஏரியாவிலுள்ள பிச்சைகாரர்களுக்கு அதே பகுதியில் பெருக்குதல்,வீட்டு காவலாளி வேலை ,மற்ற வேலைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.இது குறித்து அந்த குழுவின் பள்ளி மாணவி ரோஷினி,"நாங்கள் அனைவரும் குழுவாக சேர்ந்து சென்னை மேயரை சந்தித்து பேசினோம்.பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் படி கேட்டுகொண்டோம்.அதற்க்கு மேயர் பிச்சைகாரர்களுக்கு அடையாள சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யபடும் என்று தெரிவித்தார்.
அனைத்து பிச்சைகாரர்களுக்கும் இந்த உதவியை செய்யமுடியாது என்றும் பிச்சைகாரர்களுக்கு நல்ல மனம் நலம் உடையரா என்றும்,அவர்களுக்கு ரத்த பரிசோதனை,புகை பிடிக்க கூடாதவராக இருக்கவேண்டும் மற்றும் மது பழகத்திற்க்கு அடிமையாக இருக்க கூடாது என்று பல்வேறு நிபந்தனைகள் உள்ளது என்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அனிதா டேனியல் தெரிவித்தார்.சில பிச்சைகாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறி உள்ளதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.
பிச்சைகாரர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் கவுரமான வாழ்க்கை வாழ்வார்களா என்று சிந்தித்து பார்த்து தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும் என்று மற்றொரு பள்ளி மாணவனான ஹரிஹரன் கூறியுள்ளார்.
அந்த பகுதியில் வாழும் சில பிச்சை எடுத்தவர்கள் கூறும்போது நான் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் பிச்சை எடுத்து வருவேன் அவர்கள் எனக்கு மறுவாழ்வு அளிப்பதாக கூறினார்கள் என்று கூறினார்.இது குறித்து நாகூர் என்ற பிச்சைகாரர்,"நான் கடந்து சில வருடங்களுக்கு முன் பெரம்பூர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தேன் அதில் என்னுடைய நண்பர் ஒருவர்நன்றாக பழகி என்னை ஏமாற்றி விட்டு பணத்தை எல்லாம் எடுத்து சென்று விட்டார். அதனால் என் குடும்பம் நடுத்தெருவிற்க்கு வந்தது எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பிச்சை எடுத்து காலத்தை கழித்து வந்தேன். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாப்பாடு சாப்பிடுவேன் அருகில் உள்ள குளியலைறையில் சென்று குளித்து விட்டு மறுபடியும் பிச்சை எடுப்பேன்" என்று நாகூர் கூறினார்.
பள்ளி மாணவ-மாணவிகள் உதவியால் எனக்கு ஓவியம் வரைய தெரியும் என்பதால் பல இடங்களுக்கு சென்று ஓவியம் வரைந்து போதுமான சம்பளத்தை அளிக்கிறார்கள் என்று நான் தற்போது மகிழ்ச்சியுடன் இருப்பதாக நாகூர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment