மகா பெரியவாளுக்கு இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு விஷயத்திலும் பூரண ஜானமும் பேசும் வல்லமையும் உண்டு. ஒருநாள் உணவு சமைப்பதைப் பற்றி பேச்சு வந்தது. மகா பெரியவா தன் அனுக்கத் தொண்டர்களைப் பார்த்து 'குழம்பு, ரசம் எதனால் இந்த பெயர் வந்தது தெரியுமோ?' என்று கேட்டார்.
நாம் சாப்பிடுவதோடு சரி. இதை எல்லாம் எங்கே யோசித்து பார்த்திருக்கிறோம். இதற்கு விளக்கம் யாராலும் கூற இயலவில்லை. மகா பெரியவாளே காரணத்தைக் கூறி விளக்கவும் செய்தார்.
தான் இருப்பதாலேயே அதற்கு பெயர் குழம்பு, தான் இல்லாததால் அதற்கு பெயர் ரசம். குழம்பு வைத்தபிறகு மேலிருந்து பார்த்தால் பாத்திரம் தெரியாது குழம்பு மட்டுமே தெரியும் ஆனால் ரசத்தைப் பார்த்தால் தெளிவாக பாத்திரத்தின் கீழ்வரை தெரியும் என்று கூறினார்.
குழம்பில் கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்களை வெட்டி போடுவார்கள். இதற்கு 'தான்' என்று பெயர் ஆனால் 'தான்' என்பதற்கு 'நான்' என்ற அர்த்தமும் உண்டு. பெரியவா சொன்னதன் உட்பொருள் இதுதான். எங்கே தான் என்ற அகங்காரம் இருக்கிறதோ அங்கே குழப்பம் நிச்சயம். தான் என்ற அகங்காரம் அகன்றால் அங்கே தெளிவு தானாக ஏற்ப்படும். ரசம் என்பதற்கு இனிமை, அழகு என்ற பல அர்த்தங்கள் உண்டு. வாழ்க்கை ரசம் போன்று இருக்க வேண்டும் என்றால் 'தான்' என்ற அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒரு சாதாரண மனிதனுக்கும் புரிகிற மாதிரி எளிமையான உதாரணத்துடன் வாழ்க்கை தத்துவத்தை விளக்க பெரியவா ஒருவரால் மட்டுமே இயலும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment