" அண்ணா, நம் சமூகத்தில் பலருக்கு காஞ்சி ஸ்ரீ மடத்தின் ஸ்வஸ்தி தெரியமாட்டேங்கிறது. உபநயனம் கல்யாணம் போன்ற வைபவங்களில் ஆச்சார்யாள் சம்பாவனை, ஆச்சார்யாள் மரியாதை செய்யும்போது இந்த வாசகங்கள் சொல்லுவதற்கு ஒரிருவரை சேகரிப்பதற்குள் மிகவும் கஷ்டமாக உள்ளது. மடத்தை சார்ந்த நம் எல்லோரும் இதை தெரிந்து வைத்திருக்க வேண்டமா? ...."
ஸ்ரீவித்யா உபாசகரும் வைதீக நண்பருமான ஒருவர் என்னை சமீபத்தில் சந்தித்தபோது சொன்ன வார்த்தைகள் இது.
உண்மைதான்.
நாம் எல்லோரும் முயற்ச்சி செய்தால் போதும். இதை நாமும் கற்றுகொண்டு நம் குழந்தைகளுக்கும் கற்றுத் தர முடியும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் கற்றுக்கொள்ளலாம்..
நாம் எல்லோரும் இதற்காக முயற்சி செய்வோம்.
இந்த ஸ்வஸ்தியை அவ்வப்போது நாம் சொல்லுவதனால் நமக்கு நமது ஸ்ரேஷ்டமான ஆச்சார்யாள் பரம்பரை நமக்கு ஞாபகத்திற்கு வரும் அல்லவா. அதுவே நமக்கு பெரிய புண்ணியம்தானே.. குருவின் கடாக்ஷமும் நம் எல்லோருக்கும் கிடைக்கும்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:
குறிப்பு; இந்த இரண்டு படங்களும் (தமிழ் & சம்ஸ்க்ருதம்) 'நெட்'டிலிருந்து எடுத்து நண்பர் ஒருவர் அனுப்பியுள்ளார்..
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment