Monday, 22 September 2014

"காமாட்சி அப்படிப் பண்ணிட்டாளாக்கும்!"

"காமாட்சி அப்படிப் பண்ணிட்டாளாக்கும்!" 

சொன்னவர்; விசுவின் அரட்டை அரங்கத்தில் வரும் ஸ்ரீதர்.

திண்டிவனம் பக்கத்துலே ஒரு பத்தாவது கிலோமீட்டரில் இருக்கிற நல்லாம்பூர் அப்படீங்கற ஒரு சின்ன கிராமம். இந்த ஊர்ல தான் நாம் பிறந்தேன். என்னுடைய தகப்பனாரோட தகப்பனார், அதாவது என்னுடைய தாத்தாவும், மகா பெரியவாளோட பூர்வாசிரம தகப்பனாரும் ரொம்ப நெருங்கின சிநேகிதாளா இருந்தவா. ஒரு சமயம் பெரியவாளோட தகப்பனார் என்னுடைய தாத்தாவிடம், "கிருஷ்ணசாமி, உனக்கு இவ்வளவு நில புல சொந்தம் எல்லாம் இருக்கே, இதெல்லாம் எப்பவும் நிரந்தரமா இருக்கும்னு நினைச்சிண்டு இருக்கியா ? இதெல்லாம் காணாமப் போயிடும் ஒரு நாள். இதெல்லாம் இருந்ததுன்னே தெரியாமப் போயிடும். அப்படி ஆயிடும். ஆனா என்னென்னிக்கும் இருக்கக் கூடிய ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்டு. அது கல்வி. அதனால ஒரு சின்ன ஸ்கூல் ஒண்ணு இங்கே நீ ஆரம்பிக்கணும். அதுக்கு உனக்கு என்ன வேணுமோ என்னாலான உதவியை நான் கட்டாயமா செய்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார். அவர் Education Department - ல் Inspector of Schools ஆக இருந்தவர்.

1903-ல் 'நல்லாம்பூர் துவக்கப் பள்ளி' அப்படீங்கற பேரில் என் தாத்தா ஒரு பள்ளியை ஆரம்பித்தார். 1905-ல் அந்தப் பள்ளிக்கு recognition - ம் கிடைத்தது. அந்த மாவட்டத்திலேயே முதன் முதல் recognition கிடைத்த பெருமையும் அந்தப் பள்ளிக்கு உண்டு. அதன் பின்னர் பல வருடங்கள், அந்தப் பள்ளி Inspection - க்கு மஹா பெரியவாளின் தந்தை வந்திருக்கிறார். எங்கள் ஆத்தில் எல்லாம் தங்கியிருக்கிறார். அதை நாங்கள் மிகவும் பெருமையாக நினைக்கிறோம். எங்கள் தாத்தா காலத்திற்குப் பிறகு எங்க அப்பாவின் management - ல் இந்தப் பள்ளிப் பணி continue ஆகிக் கொண்டிருந்தது.

ஒரு காலக் கட்டத்தில் எல்லாப் பள்ளிகளையும் பஞ்சாயத்துக்குக் கொடுத்து விட வேண்டும் அப்படீன்னு ஒரு ரூல் கொண்டு வந்தா. அந்த காலக் கட்டத்தில் private management - ல் இருந்த பல ஸ்கூல்கள் மீது பல complaints வந்த காரணத்தால் அரசு இந்த ரூலைக் கொண்டு வந்தது. இந்த ஆணை பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனது அப்பாவுக்கு மிகவும் மனக் கஷ்டமாகி விட்டது. உடனே என் அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு, பெரியவாளை தரிசனம் செய்து விட்டு வரக் கிளம்பி விட்டார். எனக்குப் பனிரெண்டு வயதிருக்கும் அப்போது பெரியவா அப்பாவிடம், "சிவன் சாரோட தகப்பனார் உன்னோட வீட்டில் தங்கியிருந்து ஆகாரம் எல்லாம் பண்ணியிருக்கிறாரே, உனக்குத் தெரியுமா ?" என்று கேட்டார்.

எனது தகப்பனாரும், "அமாம், தெரியும்" என்று கூறியிருக்கிறார். "சரி, என்ன விஷயமா வந்திருக்கே?" என்று பெரியவா கேட்டார். என் அப்பா விஷயத்தைக் கூறியவுடன், " சரி, எழுதிக் கொடுத்துடு. ஒண்ணும் ஆகாது" என்று சொல்லி பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்து விட்டார். பெரியவா பேச்சுக்கு மறுப்பேது? பஞ்சாயத்துக்கு எங்கள் பள்ளியைக் கொடுக்க சம்மதிக்கிறோம் என்று எழுதிக் கொடுத்து விட்டார் என்னுடைய அப்பா. இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஆர்டர் வந்தது. அதைப் படித்தவுடன், சந்தோஷத்தில் குதிக்கிறார் என்னுடைய அப்பா. ஒன்றும் புரியவில்லை எங்களுக்கெல்லாம். கடைசியில் என்னவென்று பார்த்தால் அதில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.

"There are lot of complaints on the schools in this district. But, this particular school, "Nallambur Aided Elementary School" which was started in 1903 and got recognized in 1905 that is currently run by the son of the founder. There is not even a single complaint on this school. Hence this school can be continued to run under the present management. Rest of the schools in this district can be given to Panchayat."

இந்த ஆர்டரைப் பார்த்த சந்தோஷத்தில் உடனே என்னையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் கிளம்பி விட்டார் என்னுடைய அப்பா. பெரியவாளை நமஸ்காரம் செய்தோம். "பெரியவா அனுக்ரஹத்தில் எல்லாம் நல்ல படியாக முடிந்தது" என்று கூறினார் அப்பா. அதற்கு பெரியவா சிரித்துக் கொண்டே, "காமாட்சி அப்படிப் பண்ணிட்டாளாக்கும்!" என்று கேட்டார். என் அப்பா, "பெரியவா, நீங்க எழுதிக் கொடுத்துடு, ஒண்ணும் ஆகாது அப்படீன்னு சொன்னப்ப நிஜமாவே எனக்கு ஒண்ணும் புரியலே... எழுதிக் கொடுத்துடு... ஒண்ணும் ஆகாது-ன்னா எப்படி அது அப்படீன்னு நினைச்சுண்டிருந்தேன். ஆனா பெரியவா சொல்றா... நாம பண்ணிடணும்னு அப்படியே பண்ணிட்டேன். இப்பதான் எனக்கு அதுக்கு அர்த்தம் புரிகிறது" என்று கண்களில் ஜலம் மல்க நமஸ்காரம் செய்தார்.

இந்த மாதிரி பனிரெண்டு வயது சிறுவனாக நான் இருந்த காலத்திலேயே , "எல்லாமே நான் தான்!" என்று என்னை ஆட்கொண்டு விட்டார் மஹா பெரியவா!"

ஸ்ரீதரின் அனுபவம் தொடரும்


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator