ஹிந்து தர்ம சிந்தனைகள் 158 :
ஒன்று இரண்டாகி பின்பு பலவாகி :
இந்த விஷ்ணுபுராண வர்ணனைகள் மட்டுமின்றி நமது புராணக் கதைகளின் பலப்பல வர்ணனைகளும் சூட்சுமப் பார்வையில் பார்க்கும்பொழுது வெவ்வேறு அற்புதப் பொருட்கள் புரிய வரும் !! அவ்வாறான பார்வையின்றி இருந்தால் தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் எப்படி என்பது போல குதர்க்கம் பேசத்தான் தோன்றும்!!
உதாரணமாக ஆதிசேஷன் என்கிற பொழுது ஒரு பாம்பு மிகப் பெரியது அது ஆயிரம் தலைகளை உள்ளதாக இருக்கிறது , அது பாற்கடலில் மிதந்த வண்ணம் தன உடலை நாராயணனின் படுக்கையாகவும் தன் தலையைக் குவித்து அவருகுக் குடையாகவும் வைத்துள்ளது என்றால் அது ஸ்தூல அறிவுக்கு ஒவ்வாத விஷயமாக இருக்கலாம்!! ஆனால் சூட்சம நிலையில் வேறு பொருள் தெரிய வரும்!! பலப்பல ஆயிரம் ஆசைகளும் அடங்கிய நிலையில் தன்னிடம் அவற்றை பணிந்து தலை குனிய வைத்து அந்த ஆசைகள் எழ முடியாத வண்ணம் அவற்றின் மீதே வீற்றிருந்து ஆட்சி செய்பவன் நாராயணன் என்கிற பொருள் தோன்றும்!!! இவ்வாறு சிந்திப்பது மனதின் தேடலால் மட்டுமே உண்டாகும் !!!
இந்த முக்கடவுளர் விஷயமும் அப்படித்தான்!! இந்த நிகழ்வுகள் குறிக்கும் வேறேதோ விஷயம் பற்றிப் பின்னர் சொல்ல விரும்பும் அதே வேளையில் இவை தத்துவார்த்த ரீதியில் எதை உரைக்கின்றன என்று காண விரும்புகிறேன்!! நாராயணனிடம் இருந்து பிரம்மம் வெளிப்பட்ட பின் சிவம் உதித்த பின்னால் உலக இயக்கத்துக்குண்டான மக்களைப் படைக்கும் விஷயமெல்லாம் பிரம்மதேவனால் மேற்கொள்ளப்பட்டன!!
ஆனால் இவை அடிப்படையில் உரைக்கும் தத்துவம் ஒன்றே!! அதுவே விரிதலும் ஒடுங்குதலும் ஆகும் !! (DISINTEGRATION AND INTEGRATION). பூமியில் எங்கிருந்தோ பிறகும் மனித உயிர் வேறெதில் இருந்தோ விரிந்து வருகிறது!! இறந்த பின்னர் வந்த இடமே சென்று ஒடுங்குகிறது!! இதே போலத்தான் எல்லா உயிர்களுமே தமது அற்ப வாழ்நாளில் செய்கின்றன!! ஒரு கட்டத்தில் உயிர்கள் பக்தியாலோ, கர்ம புண்ணியங்களாலோ , ஞானத் தேடலாலோ முக்தியடையும் நிலை வருகையில் அவ்வுயிர்கள் திரும்ப பரப்ரம்மத்திடம் சென்று ஒடுங்கி விடுகின்றன!! இந்த அடிப்படையில்தான் ஹிந்து மதத் தத்துவங்கள் படைக்கப்பட்டுள்ளன!!
அப்படியானால் தேவர்கள், பிரஜாபதிகள், கடவுளரின் நிலை என்ன என்பது பற்றியும் பிரம்மா சிவபெருமான் வெளிப்படலுக்குப் பின்னால் நடந்தது பற்றியும் அடுத்த பதிவில் கூற விழைகிறேன்!!!
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment