பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் ? 26-Aug-2014 | |
பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் ? மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும். பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டிய து, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது. பூஜை அறையை குப்பைகள் இன் றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை கார ணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அல மாரிக ளை பூஜை அறையாக பயன் படுத்துவது ண்டு. அப்படி இருந்தால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழி படுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக் கலாம். கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண் ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது. நன்றி: ஆன்மீகம். |
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment