Wednesday, 27 August 2014

அற்புதம் நிறைந்த பெண்மையும், பெருமையும்! (ஶ்ரீ காஞ்சி பரமாச்சார்ய மஹாஸ்வாமிகள்)

அற்புதம் நிறைந்த பெண்மையும், பெருமையும்!
(ஶ்ரீ காஞ்சி பரமாச்சார்ய மஹாஸ்வாமிகள்)
அவ்வையின் விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்

பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎ றிப்பப்

பேழை வயிறும், பொரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான

அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!

ஹிந்து மதத்திலும் வேதங்களிலும் புராணங்களிலும் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக கௌரவம் தரப்பட்டிருக்கிறது, பெண்களை சாதாரண மனிதரைப்போல் பாவிக்காமல் தெய்வமாகவே கருதி கௌரவம் தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது, வயதான பெண்களை மட்டுமல்லாமல் சிறுவயது பெண் குழந்தையைக் கூட "பாலா த்ரிபுரசுந்தரியாக – கன்னிகையாக" பூஜிக்கிறோம், வயதான பெண்களை "ஸுவாஸினிகளாக – அம்பாளாக" பாவித்து பூஜிக்கிறோம்,

ஒரு பெண் (மனைவி) அனுமதியின்றி ஆண் (கணவன்) செய்யும் தானம் தர்மம் போன்றவைகள் பலனைத்தராது, தனது பெற்றோருக்கு செய்யும் ச்ராத்தம் கூட பெண் (மனைவி) கூட இருந்தால்தான் (ஔபாஸன அக்னியில்) நடத்தமுடியும்.

"யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:" என்பதாக எந்தக் குடும்பத்தில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்குதான் அனைத்து தெய்வ பூஜைகளும் விரதங்களும் பலனைத்தரும் என்கிறார் மனு, ஆகவே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் சுலபமாக அனைத்து உரிமைகளும் நமது சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் சுவபாவமாகவே அபலைகள் (உடல் வலிமை குன்றியவர்கள்) என்பதால் அவர்களுக்கு அடிக்கடி ஓய்வு தரப்படுகிறது,

"அர்த்தானாம் ஆர்ஜநே சைவ வ்யயே சைவ நியோஜயேத்" என்று, சம்பாதிக்கும் பணத்தை சொத்தை பொருளை வீட்டுப் பெண்களிடம் மனைவியிடம் ஒப்படைத்து, அவர்கள் மூலமாக அவற்றை சிலவு 'செய்ய'ச் செய்யவேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். இப்படி பெண்களுக்கு அதிகமாக கௌரவம் தரக்காரணம் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் தபஸ் (கற்பு) சக்திதான், ஆம்!

ஆண்கள் பலவிதமாக கஷ்டப்பட்டு பல சாதனைகள் செய்து சம்பாதிக்கும் "தபஸ்" சக்தியை இறைவன் பெண்களுக்கு இயற்கையாவே அமைத்திருக்கிறார், இந்த சக்திக்குத்தான் பதிவ்ரதா சக்தி எனப்பெயர், தனது நடவடிக்கையின் மூலமும் தனது ஆசாரத்தாலும், அன்பாலும் சிற்சில கட்டுப்பாடுகளாலும் இந்த சக்தியை அனைத்துப் பெண்களும் முன் காலத்தில் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள், அத்துடன் தேவையான நேரத்தில் அத்தகைய தனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்தும் வந்தார்கள்.

தனது கணவனை, கணவன் ஆசைபட்ட தாஸியின் வீட்டுக்கு கூடையில் சுமந்து சென்றாள் நளாயினீ என்னும் பதிவிரதை, ஆணி மாண்டவ்யர் சாபமிட்டார், விடிந்தால் உன் கணவனுக்கு மரணம் என்று, கணவனின் மரணத்தைத் தடுக்க வேறு வழி தெரியாத கற்புக்கரசி நளாயினி, சூர்யனே உதிக்கக் கூடாது என்று ஆணையிட்டாள், சூர்யனும் உதிக்கவில்லை, பிறகு தேவர்களின் ப்ரார்தனைக்கிணங்க மறுபடி சூர்யனை உதிக்கச்செய்தாள், ஸ்ரீமத் ராமாயணத்தில் ஓர் சம்பவம் ஸ்ரீ ராமரின் தர்மபத்னி சீதாதேவி ராவணணிடம் தனது கற்பின் பெருமைகளைக் கூறுகிறாள்.

|| அஸந்தேசாத் து ராமஸ்ய தபஸசாநு பாலநாத்
ந த்வாம் குர்மி தக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹ! தேஜஸா ||

ராவணா!, நீ செய்யும் கொடுமைகளுக்கு நான் நினைத்தால் உன்னை எனது கற்புக்கனலால் எரித்து சாம்பலாக்கிவிடுவேன், ஆனால் நான் செய்யமாட்டேன், ஏன் தெரியுமா!, எனது கணவர் எனக்கு (ஆபத்காலத்தில் உனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்திக்கொள் என்று) ஆணையிடவில்லை, அவர் சம்மதமின்றி நான் செய்ய மாட்டேன், ஆகவே நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்கிறாள், இதுதான் பதிவ்ரதா சக்தி.

கற்புத் தவறாத மங்கையர்க்கோர் மழை: பதிவ்ரதா சக்தியுடன் திகழும் மாதர்க்காக மாதம் ஒருமுறை மழை பெய்யும் என்கிறாள் ஔவை பிராட்டி, கண்ணகி என்னும் கற்புக்கரசி தனது பதிவ்ரதா சக்தியால் மதுரை மாநகரையே எரித்தாள் என்பதை இலக்கியம் நமக்கு எடுத்துரைக்கிறது, இதைப்போல் நமது தேசப்பெண்கள் தனது பதிவ்ரதா சக்தியின் மூலம் மிகப்பெரும் காரியங்களையும் சாதித்துள்ளனர், ஆனால் இன்றைய பெண்களிடமும் அத்தகைய சக்தி இருக்கிறதா? என்று கேட்டால், ஆம் இன்றளவும் அனைத்து பெண்களிடமும் இத்தகைய சக்தி இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் பதில்.

ஆனால் இன்றைய பெண்கள் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில்லை, ஏன் என்றால் பெண்கள் பலர் தன்னிடம் இத்தகைய பதிவ்ரதா சக்தி இருப்பதையே தெரிந்து கொள்ளவில்லை, மேலும் பலர் சுவபாவமாக (இயற்கையாக) அமைந்த இந்த தனது சக்தியை பாதுகாக்கத் தெரியாமல் வழி தவறி இழந்து விட்டார்கள், பலர் இழந்து கொண்டிருக்கிறார்கள், இதற்குக்காரணம் பதிவ்ரதா சக்தியை சரியாக பாதுகாக்காததுதான், இதை பாதுகாக்கும் வழிமுறைகளாக பெண்கள் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

எப்போதும் தந்தை கணவர் மகன் என்னும் பாதுகாப்பு வட்டத்தில் வாழ வேண்டும், குல சம்ப்ரதாயங்களை அனுசரித்து, செய்ய வேண்டிய (குலதைவ ப்ரார்த்தனை சமராதனை போன்றவற்றை) செய்யச் செய்ய வேண்டும், செய்யக்கூடாத செயல்களிலிருந்து குழந்தைகளை கணவனை தடுக்க வேண்டும், தானும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை அளிக்க வேண்டும்.

வேத சாஸ்திரத்தை அனுசரித்து பற்பல கர்மாக்களை சொல்லி வந்த 'ஆபஸ்தம்ப மஹர்ஷி', தனது "ஆபஸ்தம்ப க்ருஹ்யஸூத்ர" புஸ்தகத்தில் "அட்ஞீபீஙஹட்க்ஷீணூஜ்சூ: ஙணூசூணிச்ஙூயு ஆவ்ருத சாஸ்த்ரீப்ய: ப்ரதீயேரன்" நான் கூறாத பல குடும்ப சம்ப்ரதாயங்களையும் சாஸ்திரங்களையும் குடும்பத்திலுள்ள பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்

ஏனென்றால் இன்றும் கூட பல குடும்பங்களிலும் நடைபெறும் தெய்வ பித்ரு காரியங்கள் பெண்களின் தூண்டுதலாலேயே பெண்களின் ஒத்துழைப்பாலேயே நடைபெறுகின்றன, ஆகவே குடும்பத்தில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும், அவரவர்கள் தாயார் மாமியார் போன்ற பெரியோர்களிடமிருந்து குடும்பப் பழக்க வழக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.

பெரியோர்களைக் காணச் செல்லும் போதும் ஆலயங்களுக்குச் செல்லும் போதும் ஆடை அணிவதிலும் மற்றும் சில விஷயங்களிலும் (தலையை விரித்துப் போட்டுக் கொள்ளாமல் இருத்தல், ஆசாரமாக ஆடை அணிதல்) சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முன்னோர் ஆசாரப்படி சாஸ்திரப்படி தனது கணவனையும் தனது குழந்தைகளையும் அழைத்துச் செல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு வாஸுகி தேவி 'பதிவ்ரத'த்துடன் கணவருக்குப் பணிவிடை செய்ததால்தான் இன்றையதினம் நமக்கு ஐயன் வள்ளுவன் மூலம் திருக்குறள் என்னும் பொக்கிஷம் கிடைத்துள்ளது, ஒரு சாரதாதேவியின் அனுகூலத்தால்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகம் போற்றும் உத்தம ஞானியானார், குடும்பத்தைத் துறந்து விட்டு தபஸ் செய்யக் கிளம்பிய யாக்ஞவல்க்ய மஹர்ஷியை தடுத்து நிறுத்தி தாங்கள் எதை (மரணமற்ற தன்மையை) நோக்கிச் செல்லுகிறீர்களோ எனக்கும் அந்த வழியை காட்டிவிட்டு, என்னையும் அந்த வழியிலேயே அழைத்துச் செல்லுங்கள் ,என்று தைரியமாகக் கூறினாள் மைத்ரேயி.

ஆகவே வயதானவர்கள் வயதான காலத்தில் பொருப்புகளை தனது நாட்டுப்பெண், பெண், முதலானவர்களிடம் ஒப்படைத்து ஆத்யாத்மிக விஷயத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். நமது பாரததேசப் பெண்களுக்குத்தான் இத்தகைய பதிவ்ரதா சக்தி அதிகமாக இயற்கையாகவே இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பெண்களும் தனக்குள்ள சக்தியை உணர்ந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு தனது தபஸ் (கற்பு) சக்தியை பாதுகாத்து வளர்த்து இந்த தேசத்திற்கும் தனக்கும் நன்மையை செய்ய இறைவன் அனுக்ரஹிக்கட்டும்.



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator