ஒரு உண்மையான காதல் கதை;
1976ல் சத்தியமங்கலம் காட்டில் யானைகள் இன்று இருப்பதை விட பல நூறு மடங்கு அதிகம் இருந்தன..வனத்துறை இப்போது இருப்பது போல அப்போது அவ்வளவு கெடுபிடி இல்லை.யானை வேட்டையன் சுப்பு என்பவன்,யானை தண்ணீர் குடிக்க வரும்பாதையில்,பெரிய குழி வெட்டி , நின்று கொண்டிருந்தான்..அப்போது தண்ணீர் குடிக்க யானை ஒன்று தனியாக வந்தது...அதனை தயாராக வைத்திருந்த குழிக்கு அருகே விரட்டி விழச்செய்தான்....பின்னர் தனது சகாக்களுடன் சேர்ந்து அதன் தலையை ரம்பத்தால் அறுக்க தொடங்கினான்...தலையை அறுத்தால்தான் யானை தந்தத்தை முழுவதுமாக சேதம் இல்லாமல் எடுக்க முடியும்.அவன் அறுக்க யானை வலி தாளாமல் துடித்து பிளியறியது கண்களில் நீர் ஆறாய் பெருகியஹு அந்த கயவன் விடவே இல்லை...உயிர் போகும் வரை தந்தம் கிடைக்கும் வரை அறுத்தான்..அந்த யானையின் கதறல் சத்தம் கேட்டு ஒரு கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் வந்து கொண்டிருந்த அதன் காதலியான பெண் யானைக்கு கேட்டது உடனே அதுவும் வேகமாக ஓடி வந்தது...தலையை அறுப்பவனின் வியர்வை வாசனையை நுகர்ந்தது பெண் யானை...யானைக்கு மோப்ப சக்தி மிக அதிகம்.
அது வந்து பார்க்கும்போது எல்லாம் முடிந்து விட்டிருந்தது...வேட்டைக்காரர்கள் தந்தத்துடன் ஓடியிருந்தனர்..தலை அறுபட்ட நிலையில் தன் காதலனை பார்த்த யானை பிளிறிக்கொண்டே இருந்தது....அந்த இடத்தை விட்டு நகரவில்லை குழியை சுற்றிக்கொண்டே இருந்தது கிட்டத்தட்ட ஒரு மாதம் உணவில்லாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்...அதன் பிறகுதான் க்ளைமாக்ஸ்..
தந்தத்துடன் போன சுப்பன்..விற்று பணம் வாங்கி அதை செலவழித்துவிட்டு மீண்டும் யானை வேட்டைக்கு அதே இடத்துக்கு வந்தான்..ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே அவன் வருவதை வியர்வை வாசனையை வைத்து உணர்ந்துகொண்டது பெண் யானை மறைவாக ஒரு புதர் பக்கம் நின்றது.அவன் வந்தான்....உடன் ஓடி சென்று அவன் காலகள் இரண்டையும் தும்பிக்கையால் பிடித்து தூக்கியது...கிடைத்த மரம்,பாறை என அவனை தூக்கி அடித்தது..துணி துவைப்பது போல அடித்துக்கொண்டே இருந்தது..அவன் உயிர் போனபின்பும் விடவில்லை...ஒருநாள் முழுக்க அடித்துக்கொண்டே இருந்தது சதை,எலும்பு என கொஞ்சமும் மிஞ்சவில்லை என்கிறார்கள்..அதன் பிறகுதான் அந்த யானை அந்த இடத்தை விட்டு சென்றதாம்....
விலங்குகளுக்கும் காதல் உண்டு,வலி உண்டு..!!
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment