மகாபாரதத்தின் சாரம்
அதிக ஆசை, ஆணவம், அகங்காரம் முதலான துர்குணங்களின் காரணமாகவே ஒவ்வொரு பாத்திரமும் துயரமடைகிறது. தர்மவழியில் இறைவனை சரணடைந்து வாழ்ந்தால், போராட்டமான இந்த வாழ்விலும் நிலைத்த நிம்மதியைப் பெறமுடியும் என்பதுதான்.
பகவத் கீதையின் சாரம்:
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
பலனை எதிர்பார்க்காமல் காரியத்தைச் செய்- அதுவே உன்னை நல்வழிப்படுத்தும்.
மனது அலைபாயும் போதெல்லாம் இந்த வரிகளைப் படித்தால் நிம்மதி உண்டாகும்.
பலருக்கும் ஏன் பக்தியின் பலன் கிடைப்பதில்லை?
திடமான நம்பிக்கை, வைராக்கியம் இல்லாது போவதால் பக்தி பலிப்பதில்லை. நினைப்பது நடக்காதபோதும், துன்பங்கள் வரும்போதும் இறைவன்மேல் கோபம் கொள்ளும் மனநிலைதான் பலருக்கும் உள்ளது. "கடவுளுக்கு கண்ணே இல்லை' என்று பலரும் வெறுத்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ஒரு பெண்மணி சுவாமி படங்களைக் கழற்றி தெருவில் வீசிவிட்டார். சிலர் துயரங்களைக் கண்டு மனம் வெறுத்து, "இனி நான் பூஜையே செய்யமாட்டேன். கோவிலுக்குச் செல்லமாட்டேன்' என்கிறார்கள். இதுவா உண்மையான பக்தி? கடலில் கட்டிப்போட்டபோதும் சிவனை நம்பிக்கையுடன் வேண்டி கரையேறிய திருநாவுக்கரசு சுவாமிகள்போல் திடமான நம்பிக்கையையும் வைராக்கியத்தையும்- சிறிதாவது நாம் முயன்று பெற வேண்டும்.
இறைவனை வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் கடவுளுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. "மின்னாயிரம்' என்று துவங்கும் அபிராமி அந்தாதி பாடலில் (எண்- 55) "முதல்வி தன்னை உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே' என்று அபிராமி பட்டர் கூறுவது எவ்வளவு உண்மை!
"தகுதியில்லாத- உபயோகமில்லாத என்னைக் கொடுத்து உன்னைப் பெற்றேன்' என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகிறார்.
"தந்ததுஎன் தன்னைக் கொண்டது உன் தன்னைச்
சங்கரா யார்கொலோ சதுரர்
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது என் பால்'
என்ற வரிகள், இறைவனுக்கு நம்மால் எந்தப் பயனும் இல்லை என்பதை விளக்கும். அவனைப் பெற்று பயனடைய வேண்டியது நாமே!
பொருள் அறிந்து இறைப் பாடல் களைப் படிக்கவேண்டும். அது உணர்விலே இடம்பெற்றால்தான் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க' முடியும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment