ஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள் எதுவுமே கிடையாது.
ஏரிகளும் கிடையாது.ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது. கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைதான் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மக்கள் பயன்படுத்திய பிறகு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்களுக்கும்,பூங்காக்களுக்கும் பாய்ச்சப்படுகிறது. அந்த நீர் விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
விலைக்கு வாங்கப்பட்ட நீரைக்கொண்டு பாலைவனத்தில் பசுமை குடில்கள் அமைத்து காய்கறிகளை பயிரிடுகிறார்கள்.
அப்படி பசுமை குடில்களில் பயிரிடப்பட்டிருக்கும் தக்காளி செடிகள்தான் மேலே உள்ள படம். கடந்த ஆண்டு மட்டும் UAE 38,000 டன் காய்கறிகளை விளைவித்து 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்திருக்கிறது.
2020ம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 40% காய்கறிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரக அரசு. தக்காளி,முட்டைக்கோசு,வெள்ளரிக்காய்,கத்தரிக்காய் என ஒவ்வொரு காய்கறியாக பயிரிட்டு வந்தவர்கள் தற்போது கோதுமை பயிரிட்டு அறுவடை செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்
இதே வேகத்தில் போனால் பாலைவனத்தில் நெல் அறுக்கும் காலம் விரைவில் வந்தாலும் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்போது விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற மாட்டார்கள்.
இங்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் சற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் என்பதால் மக்கள் இவற்றை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். UAEயை போன்றே பெரும்பாலும் பாலைவனத்தை கொண்ட நாடுதான் இஸ்ரேல்.
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையை என்பது போல இஸ்ரேலில் ஓடும் யோர்தான் நதிதான் அவர்களின் ஒரே நீர் ஆதாரம்.
பல்விளக்கக்கூட பற்றாத தண்ணீரைக் கொண்டு பல பயிர்களையும் விளைவிக்கிறார்கள் இஸ்ரேலியர்கள். இஸ்ரேலின் மழை பொழிவு விகிதம் ஆண்டுக்கு வெறும் 50 மி.மீட்டர்தான்.
6.25 மில்லியன் எக்டர் மீட்டர்தான் இஸ்ரேல் நாட்டின் ஒட்டுமொத்த நீர்வளம். அது சராசரியாக நம்மூர் பவானிசாகர் அணையில் ஒர் ஆண்டில் வந்து சேரும் நீருக்கு சமம். இந்த அளவு நீரைக்கொண்டு அவர்கள் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறார்கள்.
அப்படி விவசாயம் செய்யும் ஒரு இஸ்ரேலிய விவசாயியின் சராசரி ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 66,000 அமெரிக்க டாலர்கள்.
பரப்பளவில் மிகச்சிறிய நாடான இஸ்ரேலில் விவசாயம் நடைபெறும் பகுதி இன்னும் குறைவானது. சொட்டு நீர் பாசனம்,தெளிப்பு நீர் பாசனத்தில் உலகிற்கே முன்னோடி இஸ்ரேலியர்கள்.
இஸ்ரேலிலாவது யோர்தான் நதி எனப்படும் ஒரு சிறிய நதி ஓடுகிறது.
ஆனால் UAEல் அதுக்கூட கிடையாது.முற்றிலும் பாலைவன தேசமான இங்கு மழை பொழிவின் அளவு இஸ்ரேலைவிட மிக குறைவு. அவர்கள் காட்டிய அதே சொட்டு நீர் பாசனம்தான் இங்கும் கைகொடுக்கிறது.
நீர் பாசன முறையில் நாம் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய நேரம்நேரம் நெருங்கிவிட்டது.
நம் நாட்டில் நீர்வளம் குறைவான பகுதியில் இதே போன்ற முறையை பின்பற்றி நாமும் விவசாயம் செய்ய முயற்சி செய்யலாமே | Timeline Photos ஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள் எதுவுமே கிடைய... | |
|
No comments:
Post a Comment