மகிழ்சிகரமான வாழ்க்கையை அமைத்து கொள்வது எப்படி?
உங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதற்கும் உங்களுடைய எண்ணம் தான் காரணம்.
நான் இன்று மகிழ்ச்சியாக இல்லை. நான் தொடங்கும் எந்த காரியமும் தோல்வியில் முடிய போகிறது என்று நினைத்து பாருங்கள்.
உங்களிடத்தில் விரும்பத்தகாத ஒரு மாற்றம் தெரியும். உங்களின் செயல் திறன் குறைந்து விடும். சோம்பேறித்தனம் வந்து விடும். நாளை அந்த காரியத்தை செய்யலாம் என்று ஒத்தி வைத்து விடுவீர்கள். முகத்திலே கவலை, சோர்வு என உங்கள் முகப்பொலிவே மாறி விடும்.
இதை விடுத்து சற்று மாற்றி சிந்தனை செய்து பாருங்கள். என் மன திருப்திக்கு தகுந்தாற்போல் எல்லாமே நடக்கும் என நினைத்து பாருங்கள். உடனடியாக மகிழ்சிகரமான எண்ணங்கள் உங்கள் முகத்தில் தவலும். உங்கள் நடை உடை பாவனையில் மாறுதல் தெரியும். அந்த காரியமே உங்களுக்கு சாதகமாக நடந்து விட்டது போன்று ஒரு எண்ணம் உண்டாகும்.
நீங்கள்தான் சந்தோசத்தையும் கவலையும் உற்பத்தி செய்யும் தொழிலாளி. சந்தோசத்தை உற்பத்தி செய்தீர்கள் என்றால் உங்களுடைய வாழ்க்கையும் சந்தோசமாக இருக்கும். கவலையை உற்பத்தி செய்தீர்கள் என்றால்
அது மேற்கொண்டு விரோதம் பயம் போன்றவைகளை உற்பத்தி செய்து உங்களை படு குழியில் தள்ளி விடும்.
சந்தோசமும் கவலையும் உற்பத்தி செய்யப்படும் இடம் உங்கள் மனதுதான். உங்களுடைய மனதில் சந்தோசத்தை மட்டும் உற்பத்தி செய்ய இடம் கொடுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.
உங்களிடம் எப்போதும் சந்தோசகரமான நிகழ்சிகள் என்ற பட்டியலை வைத்திருங்கள். கவலையடைய செய்யும் நிகழ்சிகள் உங்கள் மனதிற்குள்
நுழைய முயற்சிக்கும்போது சந்தோசகரமான நிகழ்சிகளை உங்கள் மனதிற்குள் அனுப்பி வையுங்கள். அப்போது கவலையடைய செய்யும்
நிகழ்சிகள் உங்கள் மனதில் இருந்தாலும் அவை தன்னாலேயே வெளியேறிவிடும். காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதும் இரவில் படுக்கைக்கு செல்லும் போதும் இந்த முறையை கடை பிடித்தால் உங்களது அன்றைய பொழுது மிகவும் மகிழ்சிகரமாக இருக்கும்.
இந்த நாள் மகிழ்ச்சியான நாள் இன்று நான் செய்ய போகும் எல்லா காரியங்களுமே வெற்றியடைய போகிறது என்று கூறிக்கொண்டே உங்கள் காரியத்தில் ஈடுபடுங்கள். உங்களையும் அறியாமலையே ஒரு உற்சாகம் பிறக்கும். நீங்கள் ஈடுபட்ட காரியத்தில் வெற்றியும் கிடைக்கும்.
மனம் என்பது கட்டுப்பாடு இல்லாத குதிரை போன்று பல நேரங்களில் தறி கெட்டு ஓடும். தறிகெட்டு ஓடும் மனதை தியானம் என்ற கடிவாளத்தின் மூலமாகதான் அடக்க முடியும்.
No comments:
Post a Comment