ஈரோடு பேர் வந்த காரணம்
மகா பெரியவா சொன்னது.
தன்னை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார்
பெரியவர். ஈரோட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது.உன் ஊருக்கு அந்தப் பேர் எப்படி வந்தது தெரியுமா" என்றார்.அவருக்குத் தெரியவில்லை.
"சரி உங்க ஊர் சுவாமி பேரென்ன?" என்றார்.ஏதோ வித்தியாசமாக இருக்கும் மறந்து போச்சு.."என்றார்.
"ஆர்த்ர கபாலீசுவரர்னு பேரோ?" என்றார் பெரியவா.
ஆமாம்..ஆமாம்!" என்று அவர் சொல்லவே,
"அதற்குத்தான் ஈரோடு'னு அர்த்தம். '
ஆர்த்ரம்னா ஈரம்; கபாலம்னா மண்டையோடு,ஈர ஓட்டைக் கையிலே வைத்திருப்பதால் [ஈரோடு}
சுவாமிக்கு அந்தப் பெயர்
பிரும்மாவோட அஞ்சு தலைலே ஒரு தலையை
சிவபெருமான் திருகி எடுத்ததால், பிரம்மஹத்தி
தோஷத்தினால் சிவன் கையிலேயே கபாலம் ஒட்டிக் கொண்டுவிட்டது.திருகி எடுத்தால் ரத்தம் சொட்டிய ஈரத்துடன்
கூடிய ஓட்டைக் கையிலே வைத்திருக்கும்
சுவாமியை உடைய ஊர் 'ஈரோடு' என்றார்!
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment