குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும் 16-Aug-2014 | |
குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும் குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும் குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும். மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம் பங்காளி பகை உண்டாகும். வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டு. தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும். விளக்கின் மகிமை கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும். விளக்கேற்றும் முகத்தின் பலன் குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்-மத்திமபலன் குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்- குடும்ப ஒற்றுமை குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்- புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால் - பசு, பால், பூமி, சேர்க்கை குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் - பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும். மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. குத்து விளக்கை தானாக அணையவிடக்கூடாது. ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தால் அணைக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். தீப வழிபாட்டின் சிறப்பியல்புகள் பசு நெய்: செல்வம் பெருகும் நல்லெண்ணெய்: உடல் ஆரோக்கியம் விளக்கெண்ணெய்: புகழ் தாம்பத்திய சுகம் இலுப்பெண்ணெய்: ஜீவ சுகம், ஞானம் புங்க எண்ணெய்: முன்னோர்களின் ஆசி. மேற்கூறிய ஐந்து வகையான எண்ணெய்கள் கலந்து தீபத்தை ஏற்றி வந்தால் குடும்பத்தில் மேற்கூறிய நன்மைகளும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். நன்றி: aanmigam. |
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment