யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எம் உலகதத்துவம்
கடவுளை கேவலப்படுத்துவது எவ்வாறு என்றால்
கடவுளுக்கு தனியாக எல்லாவற்றையும் படைத்து நிர்வாகம் செய்ய சக்தி இல்லை.
படைக்க ஒரு கடவுள் வேண்டும்
காக்க ஒருவர் வேண்டும் அழிக்க ஒருவர் வேண்டும் குலத்துக்கு குலம் ஒரு கடவுள் வேண்டும்
என்று கடவுள் தன்னந்தனியே அனைத்தையும் செய்ய இயலாதவன் என நினைப்பது தானே அவனை கேவலப்படுத்துவது.
கடவுள் திருடினார் கடவுள் கற்பழித்தார் கடவுள் தூங்கினார் கடவுள் முன் யோசனை இன்றி வரம் கொடுத்து விட்டு அரக்கனிடம் மாட்டிக் கொண்டார் கடவுள் மனைவியை எதிரி கடத்தி கொண்டு போனான்
etc. etc.,
இப்படியெல்லாம் கூறினால் தானே கடவுளை இழிவு படுத்துவதாகும். //////////////////////////////////////////////////////
உங்கள் முன்னோர்களின் நம்பிக்கைகளை நீங்கள் மிக குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள் என்பது உங்கள் கேள்வியில் தெரிகிறது. நீங்கள் நினைக்கும் அளவிற்கு நம் முன்னோர்கள் அறிவில்லாதவர்கள் அல்ல. உலகத்துக்கே ஆன்மீக வழிகாட்டியாக இருந்தவர்கள் நம் முன்னோர்கள். அரேபிய/துருக்கிய படைகளின் ஆக்கிரமிப்பால் இன்று இப்படி நம் மக்களே நமக்கு எதிராக பேசும் சூழ்நிலை வந்துள்ளது.
கடவுள் என்பது யார் ? அனைத்தையும் கட உன்னுள் அவரை உணர்வாய் என்பதே கடவுள் எனும் அருமையான தமிழ் சொல்லின் சிறப்பு. இந்திரனும், சந்திரனும், சூரியனும் கடவுள் அல்ல. அவர்கள் தேவர்கள். நம்மை விட ஆற்றல் கொண்ட சக்திகள் அவ்வளவே.
கடவுள் தனியாக செய்கிறார் என்பதே உங்கள் குழப்பத்தை காட்டுகிறது. அவன் பிரிக்க முடியாமல் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையில் அவனை எப்படி நீங்கள் தனியாக இருக்கிறான் என்று சொல்ல இயலும் ? தனியாக, பலவாக என்றெல்லாம் நீங்கள் கடவுளை வரையறுத்து விட முடியாது.
தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அது குளமாக தேங்கி இருக்கிறது, நதியாக ஓடுகிறது, கடலாக பெருகுகிறது, பெருங்கடலாக சூழ்ந்திருக்கிறது, ஏன் நம் உடலுக்குள்ளும் இருக்கிறது. அந்த தண்ணீரை ஏன் நாம் கடல், நதி, குளம் என்று பிரிக்க வேண்டும் ? எல்லாமே தண்ணீர் தானே ? எதற்காக இந்த பிரிவுகள் ? ஆக இறைவனை பல்வேறு வகைகளில் வரையரை படுத்திக் கொள்வது நம் அவசியத்தை கொண்டு தான். இறைவனின் பேராற்றலை நம்மால் அளவிட முடியாது. நம்மால் அருவம், உருவம் என அவனை வரையறுக்க முடியாது, நம்மால் ஒரு புனித நூலை படித்து அவனை புரிந்துக் கொண்டு விட முடியாது. நாம் செய்வதெல்லாம் நம் சக்திக்கு தகுந்தார் போல் அந்த அளப்பறிய சக்தியை உருவகப்படுத்தி வணங்குவதுதான்.
சிலர் ஒரு உருவத்தை கொண்டு அந்த அளப்பறிய பேராற்றலை வணங்குகிறார்கள். சிலர் ஒரு ஒலியை (உதாரணம் "அல்லா") உச்சரித்து இறைவனை வணங்குகிறார்கள். சிலர் ஒரு குறியை ( லிங்கம் அல்லது சிலுவை) வணங்குகிறார்கள். இப்படி வணங்குவது அவரவர் தன்மைக்கும், சித்தாந்தத்திற்கும் தகுந்தாற் போல் பலவிதமாக உள்ளது. அறிவார்ந்த மக்கள் இதை உணர்கிறார்கள். அறிவில்லாத காட்டுமிராண்டிகளோ, தாங்களே இறைவனை புரிந்துக் கொண்டு விட்ட மேதைகள், அவனுக்கு உருவம் இல்லை என்று அறியாமையில் உளறுகிறார்கள், மற்றவர்களை ஏளன படுத்துகிறார்கள்.
அரேபியர்கள் காட்டுமிராண்டிகளாய் திரிந்த காலத்திலேயே சித்தாந்த செழுமையின் உச்சத்தில் இருந்தது நம் நாடு என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். ஆகையால் சினிமா வியாபாரிகள் காட்டும் புராண கதைகளை பார்த்து விட்டு இந்து மகா சமுத்திரத்திரத்தை தவறாக கணக்கிட்டு விடாதீர்கள். உபநிடதங்கள், கீதை ஆகியவற்றை படியுங்கள். உங்கள் முதாதையர்களின் சிறப்பு உங்களுக்கு புரியும். உங்கள் முன்னோர்கள் கத்தி முனையில் மதம் மாற்றிய கயவர்களின் சூழ்ச்சியையும் நீங்கள் உணர்வீர்கள்.
No comments:
Post a Comment