அமைதியான மணவாழ்க்கை...
ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்..அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.. 'அப்படி அவர்கள் 'மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை' வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது' என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்..
ஒரு பத்திரிக்கை ஆசிரியர்," சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.. நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள்...அதன் ரகசியம் என்ன." என்று கேட்டார்..
அந்த கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு,"திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம்..ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம்.. நான் அமர்ந்த குதிரைஅருமையானது,
அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது..அப்படி சென்றுக் கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது..எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, "இது உனக்கு முதல் தடவை!!!." என்றாள்..மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது.. அமைதியாக எழுந்த என் மனைவி, "இது உனக்கு இரண்டாவது தடவை!!!" என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்...அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்...நான் உடனே பதற்றமாய் என் மனைவிப் பாத்து,"அந்த பாவப் பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே...ஏன் இந்த கொலைவெறி" என்று உரக்கக் கத்தினேன்..உடனே, அவள் அமைதியாக, "இது உனக்கு முதல் முறை!!! என்றாள்…
அவ்வ்வளோ தான்..................அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்.." என்றார்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment