கற்பகாம்பாள் காசுமாலை...!!!
கற்பகாம்பாள் காசுமாலை
கற்பகாம்பாள் காசுமாலை
சென்னை மயிலாப்பூரில் உள்ளது மிகப்பிரசித்தி பெற்ற கற்பகாம்பாள்உடனுறை கபாலீஸ்வரர் ஆலயம்.இந்த ஆலயத்தில் 1950ஆம் வருடத்திலிருந்து ஆனந்தவல்லி, தன்னையொத்தபெண்களுடன் ஒரு குழுவாக அமர்ந்து, அனுதினமும் லலிதாசஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம். இவர்களுக்குமுத்துலட்சுமி அம்மாள் என்பவர் தலைவியாக இருந்தார். இந்தக்குழு "கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டி" என்றும், தலைவி"குரு பாட்டி' என்றும் அழைக்கப்பட்டனர். ஆனந்தவல்லிசெயலாளராக இருந்தார். அனுதின பாராயணத்தைத் தவிரகோயிலின் பல்வேறு உற்சவங்கள் மற்றும் விசேஷ நாட்களில்அர்ச்சனை, அபிஷேகம் ஆராதனை ஆகியவையும் செய்துவந்தனர்.
1970-ல் ஒரு நாள் குரு பாட்டிக்கு கனவில் காட்சி அளித்தகற்பகாம்பாள், "நீயும் உனது கோஷ்டியும் தினமும் எனக்குசஹஸ்ரநாம பாராயணம் பண்ணிண்டுருக்கேள். விசாலாட்சிக்கும்காமாட்சிக்கும் இருக்காப்போல எனக்கும் தங்கத்துல சஹஸ்ரநாமகாசுமாலை வேணும். செய்து போடறியா?" என்று கேட்க, பாட்டியும்தான் கனவில் கண்டதை குழுவில் எல்லோருக்கும் சொல்லிமகிழ்ந்தார். அனைவரும் நல்ல மனம் படைத்த பக்தர்களிடமிருந்துநன்கொடை பெற்று காசுமாலை செய்து கற்பகாம்பாளுக்குஅணிவிக்க முடிவு செய்தனர்.
வருடங்கள் பல சென்றும் குழுவின் நடுத்தர வர்க்கத்து மாதர்களால்காசுமாலைக்குத் தேவையான பெரும் பொருளை சேர்க்கமுடியவில்லை. சிலரது ஆலோசனையின் காரணமாக 1978-ல் குருபாட்டியும் ஆனந்தவல்லி மற்றும் உறுப்பினர்களோடுபரமாச்சாரியாளிடம் முறையிட காஞ்சி மடத்திற்கு சென்றனர்.காத்துக் கொண்டிருந்த அவர்களிடம், மடத்துப் பணியாளர் ஒருவர்வந்து, "பெரியவா உங்களை உடனே வரச்சொன்னா; உள்ளேபோங்கோ" என்று சொல்லவும் விரைந்து உள்ளே சென்றனர். மஹாபெரியவாளின் தரிசனத்தில் மெய்சிலிர்த்துப் போயிருந்தவர்களிடம், :என்ன? காசுமாலைக்கு பணமும் பொருளும் சேரலியா?" என்றுமகான் கேட்டார். தாம் முறையிட வந்ததை முன்னதாகவே மஹாபெரியவா கேட்டதால் சொல்வதறியாது நின்றவர்களிடம், பெரியவா"அம்பாள் தானே கேட்டா; அம்பாளே அதுக்கு அருள் கொடுப்பா;கவலை படவேண்டாம் " என்று கூறினார்கள். மேலும்"விசாலாட்சிக்கும் காமாட்சிக்கும் இருக்கறது பணக்கார காசுமாலை;ஆனா கற்பகாம்பாளுக்கு கிடைக்கப் போறது பக்தியால காசுமாலை"என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார்கள். பிறகுஆனந்தவல்லியிடமும் குரு பாட்டியிடமும் "கற்பகம் சுவாசினிசங்கம் அப்பிடின்னு பேர் வச்சு நிறைய சுவாசினி மற்றும் பாலாதிருபுரசுந்தரி பூஜைகள் செஞ்சிண்டு வாங்கோ" என்று சொல்லிஆசீர்வாதம் செய்து பிரசாதமளித்தார்கள்.
மஹா பெரியவா சொன்னதை சிரமேற்கொண்டுநடைமுறைப்படுத்தியதால், பொன்னும் பொருளும் வந்துகுவிந்தன. 1982-ல் காசு மாலை செய்யும் வேலை துவங்கியது.சென்னை உம்மிடி பங்காரு கண்ணன் அவர்களிடம் வேலைஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொரு காசின் ஒரு புறத்தில் ஒருநாமாவும், மறு புறத்தில் கோயிலின் முத்திரையான சிவலிங்கத்தைமயில் பூஜை செய்வது-பின்னணியில் அம்பாள் உருவமும்பதிக்கப்பட்டது. அவ்வப்போது வேலையின் முன்னேற்றம் குறித்துகாஞ்சி மடம் மூலமாக மஹா பெரியவாளுக்கு தெரிவிக்கப்பட்டது.ஸ்வாமிகளும் மடத்தின் வேத பாடசாலை பண்டிதர்கள் சிலரைஅனுப்பி வைத்து நாமாக்களின் சரியான பதிவு மற்றும் வரிசைமாறாதிருத்தல் ஆகியவற்றை ஆய்வு செய்ய வைத்தார். இந்தமகத்தான காரியத்திற்கும் பல முட்டுக்கட்டைகள் – ரிலீஜியஸ்எண்டோமென்ட் போர்டு; கோயில் போர்டின் ஒரு சில உறுப்பினர்கள்;சில வேலை இல்லாத சமூக அமைப்புக்கள் மற்றும் சில விஷமிகள்என பல வடிவுகளில் வந்தன. ஆனாலும், மஹா பெரியவாளின்அருளாசியினாலும், நிர்வாக அதிகாரி சுகவனேஸ்வரர்; தக்கார்குப்புசுவாமி; தலைமை அர்ச்சகர் விஸ்வநாத சிவாச்சாரியார்;வழக்கறிஞர் கிருஷ்ணஸ்வாமி ஆகியோர் உதவி செய்ததாலும்வேலை நன்கு முடிந்தது., "அருள்மிகு கற்பகாம்பாளுக்கு லலிதாசஹஸ்ரநாம தங்க காசுமாலை சமர்ப்பண விழா" 26-2-1986 அன்று கொண்டாடுவது என்றும் விவேக் & கோ விழாஅமைப்பாளராகவும் முடிவு செய்யப்பட்டது.
துரதிர்ஷ்டமோ அல்லது வினைப்பயனோ, 20-1-1986 அன்று ஆனந்த வல்லியின் கணவர் உடல்நலக் குறைவு காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கை கால்கள் செயலிழந்துபேச்சும் இல்லாமல் போனது. மருத்துவர்களும் நம்பிக்கைஇழந்து, அதிக பட்சம் 48 மணி கெடு கொடுத்துவிட்டனர்.ஆனந்தவல்லி இதைத் தாங்க முடியாது மனமுடைந்து வீட்டின்பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தார். குரு பாட்டி சங்கத்தின்உறுப்பினர்களோடும், உம்மிடி கண்ணன் மற்றும் விவேக்ஆகியோருடன் முடிவுற்ற காசு மாலையை எடுத்துக்கொண்டுபெரியவாளை தரிசிக்க மடத்திற்குச் சென்றார். இவர்கள்எல்லோரையும் பார்த்த ஸ்வாமிகள், "ஏன்? உங்க செகரட்ரி வரலியா?"என்று கேட்க,இவர்களும் அனந்தவல்லி கணவரின் நிலைமை பற்றிகண்ணீருடன் விவரித்தனர். காசு மாலையை பார்வையிட்ட மஹாபெரியவா, "மாலை ரொம்ப நன்னா வந்திருக்கு; இந்த மாலையைகற்பகாம்பாளுக்கு போட உங்க செகரட்ரி இருப்பா; கவலைப்படாமபோயிட்டு வாங்கோ" என்று சொல்லி ஆசீர்வதித்து பிரசாதங்கள்கொடுத்தார். அனைவரும் நேராகஆனந்தவல்லி வீட்டிற்கு வந்து ஸ்வாமிகளின் ஆசிகளை சொல்லி பிரசாதங்களை கொடுத்தனர்.என்ன ஒரு அதிசயம்! அதே நேரத்தில் மருத்துவ மனையிலிருந்து, ஆனந்தவல்லியின் கணவர் நினைவு திரும்பி பேசுவதாகவும்,மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது.மருத்துவர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் ஏதோ அற்புதம் நடந்துள்ளதுஎன்று சொல்லி மறு நாளே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். அவரும்இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மருத்துவ மனையிலிருந்துவீட்டிற்கு நடந்தே வந்து விட்டார்.
26-2-1986 அன்று காசுமாலை சமர்ப்பண விழா வெகு விமரிசையாகநடந்தது. அனந்தவல்லி கணவரும் சிறிது நேரம் கோயிலுக்கு வந்துவிழாவினில் கலந்து கொண்டார். செகரட்ரி என்கின்ற வகையில்அனந்தவல்லி விழாவை முன்னின்று நடத்தி, அன்று காலையில்கற்பகம்பாளுக்கு காசுமாலையினை சாற்றி மாலையில் நடை பெற்றகூட்டத்தில் தனது அறிக்கையையும் சமர்ப்பித்தார். மேலும்காசுமாலையைப் பாதுகாப்பாக வைக்க ஒரு கோத்ரேஜ்அலமாரியினையும், சுவாசினி சங்கத்தின் சார்பில் இந்தவிலையுயர்ந்த காசுமாலைக்கான ஆவணங்களையும் அளித்தார்.தற்போதும், அம்பாளுக்கு அனைத்து வெள்ளிக் கிழமைகள்,பெளர்ணமி நாட்கள் மற்றும் வருடா வருடம் பிப்ரவரி 26நாளிலும் இந்தக் காசுமாலை சாற்றப்படுகிறது..__._,_.___
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment