ஹிந்து தர்ம சிந்தனைகள் 148 :
புருஷ சூக்தம் 2 :
7. அவனுடைய இருப்பில் கால்பங்கு மட்டுமே அழியும் பிரபஞ்சமாக வியாபித்துள்ளது !!
8. அவனுடைய தன்மையில் முக்கால் பங்கு அழிவற்ற தன்மையுடன் விளங்கி நிற்கிறது!!!
9. பருப்பொருள் உலகம் உண்மையில் அவனுடைய தன்மையில் ஒரு பின்னமேயாகும் !!!
10. அவன் உலகில் அழியக் கூடிய மற்றும் அழியாத என்று இரண்டு நிலைகளில் வியாபித்து இருக்கிறான் !!!
11. அந்த விராட புருஷனிலிருந்து பிரபஞ்சமும் பின் பிரமனும் வெளிவந்தனர் !!
12. அவன் உருவான பிறகு பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து நின்றான்!!!
13. பின்னர் அவன் பூமியையும் அதன் பின் அங்குள்ள உயிர்களுக்கு உடல்களையும் படைத்தான் !!!
14. அந்த புருஷனை ஆகுதியாக்கி தேவர்கள் ஒரு யாகம் செய்தனர்!!!
15. அதில் வசந்தகாலம் நெய்யாகவும், கோடைக்காலம் விறகாகவும், இலையுதிர்காலம் ஹவிசாகவும் படைக்கப்பட்டன !!!
16. பஞ்ச பூதங்களும் இரவும் பகலும் சேர்ந்த ஏழும் அந்த யாக குண்டத்துக்கு எல்லைகளாகக் காத்து நின்றன!!!
17. அறிவுணர்ச்சியைத் தரும் ஐம்புலன்கள், இயக்கத்தைத் தரும் ஐம்புலன்கள் , ஐந்து விதமான சுழற்சி இயக்கங்கள் , மனம், புத்தி, விழிப்புணர்வு , அகங்காரம், தர்மம் அதர்மம் ஆகிய இருபத்தியொரு விஷயங்களும் ஆகுதிகளாக தரப்பட்டன!!!!
18. இப்படித்தான் தேவர்கள் அந்த யாகத்தை செய்தார்கள் !!
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment