TREASURES OF HINDUISM 23 :
தல்படேயின் முதல் விமானம் :
ஷிவ்கர் பாபுஜி தல்படே 2 :
தல்படே உருவாக்கிய நவீன உலகின் முதல் விமானம் பற்றிய மேலைநாட்டு விஞ்ஞானிகளின் கருத்துக்கள் குறித்து ஒரு பொறியாளர் என்கிற முறையில் எனக்கும் சந்தேகம்தான் இருந்தது!! ஆனால் அது பற்றிய விபரங்களைப் படித்தபோது அந்த சந்தேகம் நீங்கியது!!
ஏனென்றால் தல்படே விமானத்தை உருவாக்கிய 1895 ஆம் ஆண்டில் விமான இஞ்சின்கள் தயாரிப்பில் மேலை நாடுகளே ஆராய்ச்சி அளவில்தான் இருந்து வந்தன!! விமான இஞ்சின்கள் WHITE PETROL எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை பெட்ரோல் என்னும் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டவை!! அவ்வாறன இன்ஜினின் பாகங்கள் மிக நுணுக்கமான அளவுகளுடன் தயாரிக்கப்படுபவை!! மற்றும் மிகவும் அற்புதமான முடிவு நிலையில் ( PRECISION FINISH ) செய்யப்படுபவை!! தல்படே வெளிநாடு எங்கும் சென்றதில்லை!! எந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுமில்லை!! பின் எப்படி அவர் அம்மாதிரியான ஒரு இன்ஜினைத் தயார் செய்திருக்க முடியும் என்பதே என் சந்தேகம்!!!
ஆனால் தல்பாடேவின் விமானத்தில் இருந்த இஞ்சின் முற்றிலும் மாறுபட்டது!! தல்படேவின் நண்பரும் மும்பைப் பல்கலையில் வரைவாளராகப் பணியாற்றிய திரு.சுப்பராய சாஸ்திரி அவர்கள் மகரிஷி பரத்வாஜரின் 'வைமானிக சாஸ்த்ரா' புத்தகத்தை ஆராய்ந்து அதன் சுலோகங்களுக்கான பொருளை தல்படேவுடன் இணைந்து கண்டறிந்தார்!! அதே போல சாஸ்திரி அவர்கள் பரத்வாஜர் தந்திருந்த அந்தக்கால அளவுகளை எல்லாம் இக்காலத்து அளவுகளில் மாற்றி மகரிஷி சொல்லியிருந்த விமானங்களின் வரைபடத்தையும் தயாரித்தார்!!! அவ்வாறு தயாரித்த வரைபடங்களை அடிப்படையாக வைத்தே தல்படே தன்னுடைய விமானத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது!!!
தல்படேயின் விமானம் இன்றைய விமானங்கள் போலன்றி பெட்ரோலை எரிபொருளாகக் கொள்ளாமல் பாதரசத்தை எரிபொருளாகக் கொண்ட மெர்குரி வெர்டக்ஸ் இஞ்சின் (MERCURY VORTEX ENGINE) என்னும் ஒரு நவீனமான இஞ்சினைக் கொண்டிருந்தது!!! அந்த இஞ்சின் பற்றியும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட விமானத்தை தல்படே வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டது பற்றியும் அடுத்த பதிவில் சொல்கிறேன்!!!
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment