TREASURES OF HINDUISM 22 :
உலகின் முதல் விமானம் இந்தியனுடையது!! :
ஷிவ்கர் பாபுஜி தல்பாடே ( 1864 - 1916 )
நேற்றைய பதிவில் பரத்வாஜ மகரிஷியின் 'வைமானிக சாஸ்த்ரா' புத்தகம் குறித்த மேலைநாட்டு விஞ்ஞானிகளின் விமர்சனம் குறித்து சொல்லியிருந்தேன்!!! ஆனால் பரத்வாஜரின் புத்தகம் மெய்யானதே என்பதற்கான ஆதாரத்தையும் இன்று தருகிறேன்!!!
துரதிருஷ்டவசமாக பேடன்ட் போன்ற பல விஷயங்களாலும் அரசுகளின் அடக்குமுறைகளாலும் பல்வேறு கண்டுபிடிப்புக்கள் ஆள் மாற்றிச் சொல்லப்பட்டு புகழ் வேறு எவருக்கோ சென்று விடுகிறது!!!
நமது நாட்டின் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்கள் கண்டுபிடித்த ரேடியோவின் புகழ் கடைசியில் மார்க்கோனியிடம் சென்றடைந்தது இப்படித்தான்!!! மார்க்கோனி பேடன்ட் வாங்கிவிட அவருக்கு முன்பே கண்டுபிடித்த போஸின் பெயர் அடிபட்டுப் போனது!!
அதேபோல்தான் விமானமும்!! நாமெல்லாம் விஞ்ஞானப் புத்தகங்களில் படிக்கின்றோம் உலகின் முதல் விமானத்தைக் கண்டுபிடித்தவர் ரைட் சகோதரர்கள் என்று !! அவர்கள் 1903 ஆம் ஆண்டு விமானத்தைக் கண்டுபிடித்துப் பறக்கவிட்டனர்!!! ஆல்பிரட் ரைட் என்னும் சகோதரர்களில் ஒருவர் அவ்விமானத்தில் ஏறிப்பறக்க அது 100 அடிகள் உயரத்தில் 20 செகண்டுகள் பறந்து கீழே விழுந்தது!!! இதுதான் ரைட் சகோதரர்களின் சாதனை!!
ஆனால் ரைட் சகோதர்கள் கண்டுபிடிப்புக்கு எட்டாண்டுகள் முன்பே ஒரு இந்தியர் பரத்வாஜ மகரிஷியின் 'வைமானிக சாஸ்த்ரா' புத்தகத்தின் அடிப்படையில் ஒரு விமானத்தை வெற்றிகரமாகத் தயாரித்து அதைப் பொது மக்கள் முன்னிலையில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டுக் காட்டினார் என்றால் உங்களால் அதை நம்ப முடிகிறதா?? ஆனால் அதுதான் உண்மை!! வெள்ளையரின் அடக்குமுறைகளாலும் நம் நாட்டவர்களின் அலட்சியத்தாலும் கவுரவிக்கப்படாமலே மறைந்து போன ஒரு மாபெரும் விஞ்ஞானியின் சோகக் கதை இது!!!
மும்பையைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞரும் மும்பைப் பல்கலையில் சமஸ்கிருதப் பேராசிரியராகவும் விளங்கிய திரு. ஷிவ்கர் பாபுஜி தல்பாடே என்னும் இந்திய விஞ்ஞானி தன்னுடன் பணிபுரிந்த நண்பர் திரு. சுப்பராய சாஸ்திரியுடன் இணைந்து தயாரித்து வெள்ளோட்டம் விட்ட நவீன உலகின் முதல் விமானம் பற்றிய செய்திகளை அடுத்த பதிவில் தருகிறேன்!!!
#TREASURES_OF_HINDUISM
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment