சேனை மெழுக்குவரட்டி
மாற்றம் செய்த நேரம்:10/25/2014 11:27:38 AMஎன்னென்ன தேவை?
சேனை - 1/4 கிலோ,
காய்ந்த மிளகாய் - 10,
வெங்காயம் - 2,
உப்பு, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
சேனையை துண்டு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயையும் வெங்காயத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த காய்ந்த மிளகாய், வெங்காய விழுதை எண்ணெயில் போட்டு வதக்கவும். அதில் வேக வைத்த சேனைக்கிழங்கை போட்டு நன்றாகக் கிளறி மூடி வைக்கவும்.
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment