லக்னமும் ராசியும்!
ஜாதகத்தில் லக்னமும் ராசியும் ஒன்றாக அமையப்பெறுவது அபூர்வம். 144 பேர்களில் ஒருவருக்கே லக்னமும் ராசியும் ஒன்றாக இருக்கும். இவர்களுக்கு மனமும் செயலும் ஒன்றாகவே இருக்கும். பிறர் சொல்லைக் கேட்கமாட்டார்கள்.
அடுத்தடுத்த லக்னங்களா?
அடுத்தடுத்த லக்னம் உள்ளவர்கள்... உதாரணமாக, ஆணும் பெண்ணும் முறையே கடகம் மற்றும் சிம்ம லக்னம் கொண்டவர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்படியானவர்களை கணவன் மனைவியாக பெரும்பாலும் சேர்க்க மாட்டார்கள். ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி நடக்கும் காலங்களில் ரொம்பவே சிரமப்பட்டுப் போய்விடுவார்கள் என்பதுதான் காரணம்.
கோபமும் குணமும்!
மேஷத்தை லக்னமாகக் கொண்டு அதில் செவ்வாய் ஆட்சியாக அமைந்தால், அவர்களுக்குக் கோபம் சற்று கூடுதலாக வரும். கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதற்குச் சான்றா கவும் அவர்கள் இருப்பர். அவர்களுக்கு சொந்த வீடு அமைவது உறுதி.
நீங்களும் யோகக்காரர்தான்!
144 வகை யோகங்களில் 2, 3 யோகங்களாவது ஒருவரது ஜாதகத்தில் இடம்பெற்றிருக்கும். எந்த யோகமும் அமையாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் 'சரணாகதி யோக'த்தைப் பற்றிக்கொண்டு, இறைவனின் தாள்களை 'சிக்'கென பிடித்துக் கொண்டால், எல்லா இன்னல்களில் இருந்தும் மீண்டுவிடுவார்கள்.
அரசாங்க உத்தியோகம் அமையுமா?
சூரியன், குரு ஆகியோரில் யாரேனும் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால், அவர்களுக்கு அரசுப்பணி நிச்சயம். அப்படி அமையாமல் போனாலும், அரசாங்க விருது, அரசாங்க பணம் ஏதோ ஒரு வகையில் அவர்களை வந்தடையும் . - சுகுணா கதிரேசன் |
No comments:
Post a Comment