கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று
வெற்றி கொண்டு ஆட்கொண்டார்.இந்நாளே கந்த சஷ்டியாக
கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது.
எனவே,கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது.
கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?
சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு,
வேறு இரண்டு காரணங்களும்இருப்பதாக மகாபாரதம்,
கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன்
வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்றுநடத்தினர். ஐப்பசி மாத
அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர்.
யாக குண்டத்தில்எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து
வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை
ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார்.
இவ்வாறு முருகன்அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.
கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை
எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரதுஅருள் வேண்டியும் ஐப்பசி மாத
வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில்
முருகனைஎழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும்
அவர்களுக்கு அருள்செய்தார். இதனைநினைவுறுத்தும் விதமாகவே
ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
கண்ணாடிக்கு அபிஷேகம் -
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர்
சன்னதிக்கு எழுந்தருளுவார்.அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி
வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும்ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு
அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர்."சாயா' என்றால் "நிழல்'
எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக
இந்த அபிஷேகம் நடக்கும்.இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு
மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன்சன்னதிக்கு திரும்புவார்.
குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.
தெய்வயானை திருமணம்
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை
திருக்கல்யாணம் நடக்கிறது.அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக
இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்துதந்ததோடு தேவ
மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்
படைவீடானதிருப்பரங்குன்றத்தில் நடந்தது.
தெய்வானை திருமணம்
சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள்
முருகன், தெய்வானைதிருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை
தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்துகொள்ள வேண்டி தவமிருப்பாள்.
மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின்
பிரதிநிதியாக மயில்வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை
சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண
மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள்சுவாமி,
தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி
திருக்கல்யாணமண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.
முருகனுக்கு மஞ்சள் நீராட்டு
கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்களது
முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றிமகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு
முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டிவிழாவின் கடைசி
நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள்
தங்கள்ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும்,
போரில் வென்றதன்உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது
மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.
மும்மூர்த்தி முருகன்
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும்
பிரணவ மந்திரத்தின் பொருளைதந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர்.
அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை,சிறையில் அடைத்தவர்.
சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர்.
மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன்,
மும்மூர்த்திகளோடும்தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக
திருச்செந்தூரில் முருகப்பெருமான்,மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என
மும்மூர்த்திகளின்அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில்
இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்திசிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம் நாள்)
அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில்பிரம்மாவின் அம்சமாக அருளுவார்.
மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில்காட்சியளிக்கிறார்.
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment