என்னென்ன தேவை?
  கத்தரிக்காய் - கால் கிலோ
  புளி - ஒரு எலுமிச்சை அளவு
  வெங்காயம் - 100 கிராம்
  காய்ந்த மிளாகய் - 6
  பெருங்காயம் - சிறு துண்டு
  கடலைப் பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன்
  சீரகம், மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன்
  தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன்
  மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
  வெல்லம் - சிறு துண்டு
  கடுகு, உளுந்து - தலா 1 டீஸ்பூன்
  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
  எண்ணெய், உப்பு - தேவைக்கு
  எப்படிச் செய்வது?
  கத்தரிப் பிஞ்சுகளைத் துண்டுகளாக்கவும். அவற்றுடன் சிறிதளவு தண்ணீர், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வெறும் வாணலியில் கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகிவற்றைத் தனித்தனியாக வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
  வெந்த கத்தரிக்காயை மத்து அல்லது கரண்டியால் மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  அதில் மசித்த கத்தரிக்காய், புளிக் கரைசல், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். பொடித்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். இட்லி, தோசை, பொங்கல் ஆகியவற்றுக்கு ஏற்றது இது.   | ரசவாங்கி கத்தரிப் பிஞ்சுகளைத் துண்டுகளாக்கவும். அவற்றுடன் சிறிதளவு தண்ணீர், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் ச...  |  
  | 
No comments:
Post a Comment