இஞ்சி"
'காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடந்தவன் கோலை வீசி குலுக்கி நடப்பான் மிடுக்காய்' என்கிறது சித்த மருத்துவம். மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, சமையல் கலைஞர்களுக்கும் மிகப் பிடித்த ஒரு தாவரம் இஞ்சி. எப்படிப்பட்ட உணவிலும் துளி இஞ்சி சேர்க்க, அதன் சுவையும் மணமும் பன்மடங்கு கூடுவதே காரணம். இஞ்சியின் மகத்துவம் பற்றி நமக்குத் தெரியாத தகவல்களுடன், இஞ்சியை வைத்துச் செய்யக்கூடிய சுவை உணவுகள் மூன்றின் செய்முறையையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.
என்ன இருக்கிறது? (100 கிராமில்)
ஆற்றல் 80 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் 17.77 கிராம்
நார்ச்சத்து 2 கிராம்
கொழுப்பு 0.75 கிராம்
புரதம் 1.82 கிராம்
வைட்டமின் பி6 0.16 மி.கி.
வைட்டமின் சி 5 மி.கி.
வைட்டமின் இ 0.26 மி.கி.
தையமின் 0.025 மி.கி.
ரிபோஃப்ளேவின் 0.034 மி.கி.
கால்சியம் 16 மி.கி.
இரும்பு 0.6 மி.கி.
உலகெங்கும் உபயோகப்படுத்தும் இஞ்சியின் அளவில் 50 சதவிகிதம் இந்தியாவில் மட்டும் பயிரிடப்படுகிறது. எல்லா நாட்டை யும் விட தரமான இஞ்சி நமது இந்தியாவில் பயிரிடப்படுவதுதான்.நமது இந்திய சமையலில் இதற்கு மிக முக்கிய இடமுண்டு. வட இந்திய, தென் இந்திய சமையல் எல்லாவற்றிலும் தினமும் உபயோகப்படுத்தும் ஒரு சில உணவுகளில் இஞ்சியும் ஒன்று. இதனுடைய மருத்துவ குணங்களிலேயே இதற்கு மிக முக்கியத்துவம் அக்காலத்திலிருந்தே தரப்பட்டது.
இஞ்சியை உலர வைத்தால் 'சுக்கு'. இரண்டு விதமாகவும் நமக்கு பயன்படும். இஞ்சியில் நார்ப்பொருள் அதிகம் உள்ளதால் சிறிதே உண்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது. இஞ்சி காரத்தன்மை கொண்ட ஒரு உணவு. அதிக அமிலத்தன்மை உள்ள உணவுகளை உட்கொண்டாலும் சிறிதே இஞ்சி சேர்க்கும்போது அமிலத்தன்மை, காரத்தன்மையாக உடலில் மாற்றப்பட இஞ்சி உதவி செய்யும். உடலில் அதிகக் கொழுப்பு படியாமல் இருக்க இஞ்சி உதவி புரியும். வாய்வைப் போக்கும் தன்மை உடையது இஞ்சி.
ஆயுர்வேத முறைப்படி நமது நாட்டில் அக்காலத்தில் இருந்தே பசியைத் தூண்டவும், வயிற்று வலியைக் குறைக்கவும், வாய்வுத் தொல்லையை நீக்கவும் மருந்தாகவும் உபயோகித்து பலவிதமாக லேகியம், சூரணம் செய்து பயன் பெற்றார்கள். இஞ்சியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல நாடுகளில் மதுபானங்கள் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது (நிவீஸீரீமீக்ஷீ ஙிமீமீக்ஷீ). இஞ்சியை உலர வைத்து பொடியாக்கியதை பிஸ்கெட், கேக், மிட்டாய் போன்றவற்றிலும் மார்ச்சளிக்கான மருந்துகளிலும் சேர்ப்பதால் இதன் பயன் மிகவும் அதிகம்.
இஞ்சி முரப்பா, இஞ்சி மிட்டாய் இன்றும் பல வீடுகளில் இருப்பதைப் பார்க்கலாம். இஞ்சி, புதினா இரண்டையும் நசுக்கிப் போட்டு வட இந்தியாவில் தினமும் போடப்படும் மசாலா டீயின் ருசிக்கு ஈடு இணையே இல்லை. சுக்கும் கொத்தமல்லியும் சேர்ந்த சுக்கு மல்லிக் காபியை இன்றும் பல கிராமங்களில் காபிக்கு பதிலாக தினமும் குடிக்கின்றனர். இருமல், சளி வராமல் தடுக்கும். வந்த பின் எடுத்துக் கொண்டாலும் நலம் பயக்கும்.
ஆயுர்வேதத்தில் மூன்று முக்கிய மருத்துவ குணம் உடைய உணவை 'திரிகடுகம்' என்று கூறுவர். சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றையும் பொடி செய்து தினமும் உட்கொண்டால் வாதம், பித்தம், கபம் மூன்றையும் நமது உடலில் சமன்படுத்த உதவும் என்று எழுதி வைத்திருந்ததை உபயோகப்படுத்தி பயன் கண்டவர்கள் கணக்கிலடங்காது. பால் கொடுக்கும்போது தாய்மார்களுக்கு ஜீரணமாகவும், மலச்சிக்கல் ஏற்படாமலும், எடை கூடாமலும் இருக்க செய்யப்பட்ட சூரணம், லேகியங்களில் சுக்கின் பங்கு மகத்தானது.
பலவிதமான லேகியங்கள், சூரணங்கள் செய்ய பல நாட்டுச் சரக்குகளுடன் சுக்கும் சேர்க்கப்பட்டது. தீபாவளி மருந்திலும் இஞ்சி/சுக்கு மிக முக்கியமான பொருளானது. வட இந்திய உணவுகளான கிரேவி, மசாலா, குருமா போன்றவையிலும் பிரியாணி, புலாவ் என எல்லாவற்றிலும் இஞ்சி சேர்க்காமல் ருசியே இருக்காது. அசைவம், சைவம் இரண்டு வகை உணவிலும் இஞ்சி இல்லாத இந்திய உணவே இல்லை. தென்னிந்தியாவில் சட்னி, துவையல், குழம்பு, சில வகை ரசம், குருமா வகையில் தினமும் இஞ்சி இருக்கும்.
இஞ்சி சட்னி
என்னென்ன தேவை?
இஞ்சி - 25 கிராம், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய் - சிறிது, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் - தாளிக்கத் தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறு கட்டி, சாம்பார் பொடி - சிறிது, உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் சிதைக்கவும். புளியை ஊறவைத்து கரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து இஞ்சி விழுதைச் சேர்க்கவும். 1/4 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக வைக்கவும். அதோடு புளிக்கரைசல், உப்பு, வெல்லம், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். தினமும் செய்யும் தேங்காய் சட்னியில் மிளகாயுடன் இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து அரைத்தால் நல்ல மணத்துடன் இருக்கும். தேங்காயின் கொழுப்பு உடலில் சேராது. ஜீரணமாகும்.
இஞ்சி ஸ்குவாஷ்
என்னென்ன தேவை?
இஞ்சி வேக வைத்த தண்ணீர் - அரை லிட்டர், சர்க்கரை - 1 கிலோ, சிட்ரிக் ஆசிட் - 10 கிராம், எலுமிச்சைப் பழம் - 5.
எப்படிச் செய்வது?
எல்லாவற்றையும் ஒன்றாகக் கொதிக்க வைத்து ஆறியபின் எலுமிச்சைப் பழம் பிழிந்து கலந்து பாட்டிலில் ஊற்றவும். தேவைப்படும்போது 1 பங்கு சிரப்புடன் 3 பங்கு தண்ணீர் ஊற்றி கலந்து பரிமாறவும். இதை குடித்தால் 1/2 மணி நேரத்துக்குள் நன்றாக பசி எடுக்கும்
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment