வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் –
இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
நல்ல உணவு அல்லது கெட்ட உணவு என்று எதுவும் இல்லை.
ஆனால் நல்ல உணவுத் திட்டம் அல்லது கெட்ட உணவுத் திட்டம் என்பது நிச்சயமாக உண்டு.
இனிப்பு வகைகளைக் கெட்ட உணவு என்று கருதினால் இன்று காபி, டீ, சர்பத் மற்றும் சுவீட்ஸ் வகைகள் சாப்பிடும் அனைவரும் நீரிழிவு நோயாளிகளாக ஆகியிருக்க வேண்டும்.
மிகவும் கெடுதலானது என்று கூறப்படும் வெள்ளைச் சீனியைத்தான் எல்லோரும் தினமும் போதுமான அளவு பயன்படுத்துகிறார்கள்.
அவர்களுக்கு இருதய நோய், கவலை, சோம்பல், மன இறுக்கம், நெஞ்செரிச்சல், குற்றச் செயல்களில் ஈடுபடும் விருப்பம் முதலியன ஏன் வரவில்லை?
காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவு வகைகளும் குடலில் துண்டு துண்டாக உடைந்து சர்க்கரையாக மாற்றப்பட்டு உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது.
இந்தச் சர்க்கரைதான் க்ளூகோஸாக மாறி உடலில் சக்தியாகத் திகழ்கிறது.
அந்த வகையில் கரும்பு அல்லது பீட்ரூட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட வெள்ளைச் சீனியைச் சாப்பிட்டாலும் அதுவும் சர்க்கரையாக மாறி உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது.
இனிப்பைத் தவிர்ப்பவர்கள் என்று எவருமே இல்லை.
குறிப்பாக தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கீரைகள் முதலியவற்றில் இனிப்பு இருக்கிறது.
இந்த நான்கையும் சாப்பிடாமல் வெறும் தண்ணீரையே அருந்தி உயிர் வாழ்பவர்தான் உண்மையில் இனிப்பைத் தவிர்ப்பவர்.
அப்போதும் கூட அவர் உயிர் வாழ கல்லீரலில் கிளைகாஜென் என்ற பெயரில் சேமிப்பாகி இருக்கும் க்ளூகோஸ்தான் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது.
நம்முடைய மூதாதையர்கள் இனிப்பான தாவர இனங்கள், பழங்கள், இலைகள் முதலியவற்றைச் சாப்பிட்டார்கள்.
கசப்புச் சுவையுள்ள தாவர இனங்கள் பெரும்பாலும் நச்சுத்தன்மை உள்ளவை.
இவற்றை எல்லாம் அவர்கள் தவிர்த்தார்கள்.
அன்று முதல் இன்று வரை இனிப்புச் சுவைக்காகத்தான் உணவைத் தேர்வு செய்து சாப்பிடுகிறார்கள்.
சர்க்கரையின் குணம் மனதை அமைதிப்படுத்துகிறது.
அதனால்தான் விருந்துகளில் முதலில் இனிப்பு வகைகளைச் சேர்க்கிறார்கள்.
விருந்து முடியும்போது ஐஸ்கிரீம், பழம் என்று வைக்கப்படுகின்றன.
இனிப்பு வகைகள் நன்கு தூங்க வைக்கும்.
அதனால்தான் இரவில் பால் அருந்துகிறார்கள்.
பாலில் 'லாக்டோஸ்' என்ற பெயரில் சர்க்கரை இருக்கிறது.
வெள்ளைச் சீனியையும் சேர்த்துப் பால் அருந்தியதும் சர்க்கரை மற்றும் பாலில் உள்ள கால்சியம், உப்பு ஆகியவற்றால் உடனே மனமும் நரம்புகளும் அமைதியடைந்து சுகமான தூக்கம் வரும்.
எல்லாவற்றையும் விட மன இறுக்கத்தை அகற்றும் மருந்தாக சர்க்கரை செயல்படுகிறது.
டாக்டர்கள் எவரும் சுவீட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள் என்ற எழுதிக் கொடுப்பதில்லை.
ஆனால், நீரிழிவு இல்லாதவரை இனிப்பால் நன்மைதான்.
இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிட்டால் பற்கள் குறைவாக கெடுதல் அடைகின்றன என்பது மட்டும் ஒரு கெடுதல். ஆனால் வேறு கோளாறுகள் உடலில் ஏற்படுவதில்லை.
நம் உடல், சர்க்கரை சத்துப் பொருளை, சீனியாகவோ, பழமாகவோ வேண்டும் என்ற கேட்பதில்லை.
ஆப்பிள், திராட்சை என்றால் பல வைட்டமின்களும், தாது உப்புகளும் உடலுக்கு போனஸாகக் கிடைக்கும்.
காபி, டீயில் தாது உப்புக்கள் இல்லையே?
எனவே, பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
....
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

No comments:
Post a Comment