இந்த சித்த புருஷர் பெயர் த்ரைலிங்க ஸ்வாமி. மிக பெரிய அத்வைத ஞானி ஆவார் இவர். இவருக்கு அப்பா அம்மா வைத்த பெயர் சிவராம் அகும். சிறுவயதிலேயே இவர் மற்ற குழந்தைகள் மாதிரி விளையாட்டுகளில் ஈடுப்படாமல் ஏகாந்தமாக இருப்பாராம்.
1601 வருஷம் ஆந்திராவில் பிறந்த இவர் கிட்டத்தட்ட 280 வர்ஷங்கள் வாழ்ந்ததாக சொல்லுவதுண்டு. சாக்ஷாத் பரமசிவனின் அவதாரமாகவே அங்கிருந்த மக்கள் இவரை பார்த்தார்கள்.
52 ஆண்டுகள் அப்பா அம்மாவிற்கு பணிவிடை செய்த பிறகு அங்கிருந்து கிளம்பி நேபாள் முதலிய இடங்களில் பல காலம் இருந்துவிட்டு கடைசியாக காசியில் தங்கி அங்கு 150 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.
இவர் வாழ்ந்த காலத்தில் இவரது தினசரி உணவு வெறும் இலைகள் மட்டும். எப்போவாவது ஒரு சில காய்கறிகளையும் பழங்களையும் எடுத்துக் கொள்ளுவதுண்டு.
ஸ்வாமிகள் எப்போதுமே திகம்பரமாகவே இருந்து அருள் பாவித்துள்ளார். அவதூதர். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் பலமுறை இவரை சிறையில் அடைத்தும் இவர் வெளியே திரிந்துகொண்டிருப்பதை பார்த்து வியந்தனர்.
ஒரு தடவை நீதிமன்றத்தில் இவரை 'ஆஜர்' படுத்தியபோது நீதிபதி கிண்டலாக இவரை நோக்கி அத்வைதம் பேசும் நீங்கள் உங்களது மலத்தை (பீயை) நீங்களே சாப்பிடுவீர்களா என்று கேட்டார். உடனே அங்கேயே மலத்தை கழித்து அதை சாப்பிட்டார். இவரது மலம் தரையில் விழுந்த அந்த க்ஷனம் நீதிமன்றம் முழுவதும் நறுமணம் வீச துவங்கியது. அதோடு ஆங்கிலேயர்கள் இவரை துன்புறுத்துவதை நிறுத்திகொண்டனர். இம்மாதிரி நிகழ்ச்சிகள் ஏராளம்.
பக்தர்களுக்கு ஞானத்தை போதித்து அனுக்ரஹித்து வந்த இவர் ஒரு ஏகாதசி (டிசம்பர் 1881) அன்று சித்தி ஆனார்.
இவரது சமாதி காசியில் பஞ்சகங்கா காட்டில் உள்ளது.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

No comments:
Post a Comment