" 'உனக்கு நாளடைவில் புரியும்'
ப்ரும்மஸ்ரீ வேதபுரி சாஸ்திரிகளின் '
தாயுமான மகான்' புத்தகத்திலிருந்து
(வலையில் படித்தது.)
அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கலாம்…ஒரு முறை மேனாவில் போகும்போது ஸ்ரீ மகா பெரியவா என்னிடம் "கொஞ்ச நேரம் பொறுத்து மேனாவைத் திறந்து பார். நான் இருக்கேனான்னு கண்டுபிடி", என்றார். "உனக்கு என்ன தோன்றுகிறதோ செய்", என்று சொல்லிவிட்டு மேனாவின் கதவை மூடிக்கொண்டார்.
சிறிது நேரம் ஆன பிறகு மேனாவைத் திறந்து பார்த்தேன். ஸ்ரீ மஹா பெரியாவாளைக் காணவில்லை. மேனாவை மூடி விட்டு அழுதேன்.
பல்லக்கு தூக்குபவர்களில் ஒருவர் ஸ்ரீ குஞ்சு என்பவர். அவர், "ஏன் சாமி அழறே?" என்று கேட்டார். "உங்களுக்கு புத்தி இருக்கா? வெறும் பல்லக்கை தூக்கிச் செல்கிறீர்களே? ஸ்ரீ மகா பெரியவாளைக் காணோம்" என்று அழுது கொண்டே கேட்டேன்.
அதற்கு அவர் "ஸ்ரீ மகா பெரியவா சாமான்யப்பட்டவர் இல்லை. உனக்கு நாளடைவில்தான் ஸ்ரீ மகா பெரியவாளின் அருமை தெரியும்" என்றார். சில நேரங்களுக்குப் பிறகு ஸ்ரீ மகா பெரியவா மேனாவிலிருந்து என்னைக் கூப்பிட்டார்.
"நீ திறந்து பார்த்து பார்த்த போது நான் இருந்தேனா?" என்று கேட்டார். "நான் பார்த்தேன். நீங்கள் இல்லை. நான் உட்கார்ந்து அழுதேன்" என்றேன். "சரி, அவன் (ஸ்ரீ குஞ்சு) என்ன சொன்னான்? என்று கேட்டார்.
நான், " 'உனக்கு நாளடைவில் புரியும்' என்று சொன்னார்", என்று கூறினேன். ஸ்ரீ மகா பெரியவாளும் ஆமோதிப்பது போல் தலை ஆட்டினார்
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment