Thursday, 18 September 2014

ஹிந்துக்களே, மதச்சார்பற்ற ஊடகங்கள், நம் மத நம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகும் குருமார்களுக்கு,எப்போதும் சந்தேகத்தின் பலனை அளியுங்கள் (Please give the benefit of doubt)



சுவாமி நித்யானந்தா வழக்கின் 
தற்போதைய நிலை – 1
September 17, 2014
மூலம்:  ராஜிவ் மல்ஹோத்ரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு                                                                                            தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண்
1. சுவாமி நித்யானந்தர் மீது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திடீரென பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் மீது நில அபகரிப்புசட்டவிரோதமாக தங்கம்புலித்தோல் வைத்திருத்தல் முதல் காமம் மற்றும் போதை மருந்துகளைப்ப யன்படுத்துதல் வரை ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஊடகங்கள் ஊர்ஜிதப்ப டுத்தப் படாத ஒரு சில வீடியோக்களை பலமுறை காட்டின. சுவாமி நித்யானந்தர் கும்பமேளாவுக்கு சென்றார். பின்னர் தலைமறைவாகி கைது செய்யப்பட்டார். ரஞ்சிதா என்ற பெண்ணோடு அவர் தகாத உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்ப ட்டது. பலவாரங்களுக்கு இந்தக் குற்றச்சாட்டுப பல்வேறு ஊடகங்களுக்கு தலைப்பு செய்தியானது.
2. ஆனால் ந்த நிகழ்வுகளின் காலவரிசை அசாதாரணமானதாகவும் விசித்திரமாகவும் இருந்ததாக நான் சந்தித்த சட்ட வல்லுனர்கள்  சொல்கிறார்கள். அரசு அதிகாரிகளால் வழக்கு பதிவு செய்வதற்கு முன்னதாகவே ஊடகங்கள் சுவாமி நித்யானந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தின. அதன்பின்னர் காவல்துறை குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை திரட்ட தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்தது. பாதிக்கப்ப ட்டவர்கள் புகார் கொடுக்க முன்வரும்படியும் தங்களை அழைக்கும் படியும் நாள் முழுதும் தொலைக்காட்சிகளில் காவல் நிலைய தொலைபேசி எண்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால் என்ன அதிசயமோ ஒருவர் கூட காவல்துறைக்கும் ஊடகங்களுக்கும் செவி சாய்த்து எந்தப் புகாரையும் கொடுக்க வரவில்லை. யாரிடமும் எந்தப் புகாரும் வராத நிலையிலும்  எந்த உறுதியான ஆதாரமும் காவல்துறைக்கு கிடைப்பதற்கு முன்னரே எல்லாக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு விட்டதைப் போன்று ஊடகங்களில் திரும்பத்தி ரும்ப செய்தி பரப்பப்பட்டதே இதில் பெரிய விசித்திரமாகும்.
3. எனவே இந்த நிகழ்வுகளின் காலவரிசை எப்படி இருந்தது என்றால்: ஊடக ஊழல் குற்றச்சாட்டு ==பாதிக்கப்பட்டோரை தேடும் காவல்துறையின் விளம்பரங்கள் ==>காவல்துறை புகார்களை பதிவு செய்தல்.இது வழக்கத்திற்கு நேர் மாறானது,எதிரானது.
4. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர்ஒரு பெண்ணின் குற்றச்சாட்டினைத் தவிர அவர் மீதான எல்லாப் புகார்களும் கைவிடப்பட்டுவிட்டன. ஆரம்பத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட  சட்ட விரோதமான நிதி முறைகேடுநில அபகரிப்புமற்றுமுள்ள சட்டத்துக்கு மாறான நடவடிக்கைகள் தொடர்பான புகார்கள் எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டன.
5. முக்கியமாக பாதிக்கப் பட்டதாக கூறப்பட்ட பெண்மணியே (ரஞ்சிதா என்ற திரைப்பட நடிகை) தாமே முன்வந்து அவர்தொடர்பாக சுவாமி நித்யானந்தர் மீது சாட்டப்பட்ட எல்லாக்குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.அவரே வழக்குறைஞரை அமர்த்தி தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வதாக இந்த ஊழலில் ஈடுபட்ட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இது விடயத்தில் நாடுமுழுதும் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் கண்ணை மூடிக்கொண்டு திமுகவின் தானைத் தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு சொந்தமான சன் குழுமத் தொலைக்கா ட்சியைப் பின் தொடர்ந்தனர். திரைப்பட நடிகை ரஞ்சிதா இன்னமும் சுவாமி நித்யானந்தரின் ஆசிரமத்தில் வசித்துவருகிறார் என்பது அவர் இதில் பாதிக்கப் பட்டவராக தம்மைக்கருதவில்லை என்பதையே காட்டுகிறது.
6. ஆக நிலைமை இப்போது எப்படி இருக்கிறது. ஒரே ஒரு பெண் சுவாமி நித்யானந்தர் மீது குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.   ரஞ்சிதா மற்றும் அவரது வழக்குறைஞர் இருவரும் உச்ச நீதி மன்றத்தில் ஆஜராகி தாம் பாதிக்கப்பட்டதாக தவறாக கூறப்படுவதாகவும் இது சதி என்றும் மனுகொடுத்துள்ளார்.
7. குற்றம் சாட்டும் அந்த ஒரே பெண்மணியின் பின்புலம் ஒன்றும் இங்கேசொல்லிக் கொள்வது போல இல்லை. அவரைப் பற்றிய தகவல்களையும் நான் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆகவே அதை இங்கே சொல்லாமல் விட்டு விடுகிறேன்.
8. வலுவான ஆதாரங்கள் இல்லாததால் யாரும் இந்த வழக்கை மேலும் தொடர வலியுறுத்தாததால் இந்த விடயம் கிடப்பில் போடப்பட்டது. சுவாமி நித்யானந்தரும் இதை அப்படியேவிட்டு தானாகவே மறைந்து போக விட்டிருக்கலாம். ஆனால் வரது வழக்குறைஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்ததின் மூலம் உறுதியான நடவடிக்கை எடுத்தார்கள். கர்னாடக உயர் நீதிமன்றம் குறித்த காலத்திற்குள் வழக்கினை தீர்க்கத் தவறிவிட்டது என்றும் எல்லா தவணைகளும் கடந்துவிட்டன என்றும் மனுவில் வாதிட்டார்கள்.வழக்கினை மேல்கோர்ட்டுக்கு கொண்டு சென்று வழக்கிலிருந்து முற்றிலும் விடுபடுவது சுவாமி நித்யானந்தரின் வழக்குறைஞர்களின்  நோக்கமாக இருந்தது.
9. இந்த நடவடிக்கை சரியானது தானா?இல்லை அபாயகரமானதா என்பதைக்காலம் தான் சொல்லமுடியும்.இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் மெத்தனப்போக்கினை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. மேலும் வழக்கினை விரைவாக விசாரித்து முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் இந்தவழக்கு விசாரனை உயர் நீதிமன்றத்தில் தற்போது தீவிரமடைந்துள்ளது.
10. கர்நாடக உயர் நீதிமன்றம்தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னால் திறமையற்றதாக வெட்கிதலைகுனிய வைக்கப்பட்டதற்கும் பழிவாங்கப்போகிறதாஇது மிகவும் ஆழமானஅவசரமானஆனால் நான்கு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த வழக்கு என்பதாலும்பெரும்பாலான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டமையாலும்,தன்னுடைய முகத்தினை காப்பாற்றிக்கொள்வதற்காகக் காவல்துறை மேலும் கடுமையானதாக நடந்து கொள்ளப் போகிறதா?  இது போன்ற வினாக்களுக்கெல்லாம் விடை சொல்வதற்கு என்னிடத்தில் வல்லமை இல்லை.
11. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி: ஒரு பக்க சார்பான சந்தர்ப்பவாதிகளான ஊடகங்கள் இதை பரபரப்பை மீண்டும் உண்டாக்கும் வாய்ப்பாகக் காண்கின்றன. இந்த துறையில் பணியாற்றும் ஊடகத்தார் மிதமான நுண்ணறிவும் குறைவான வைராக்கியமும் உள்ளவர்களாக இருந்தாலும் பரபரப்புக்காக இதனை பயன்படுத்த முயல்கின்றனர்.
சுவாமி நித்யானந்தரின் ஆசிரம வாசிகள் மற்றும் அவரது அமைப்பினை சார்ந்த பக்தர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால்தொடர்ந்து அவருக்கு விசுவாசமாக நம்பிக்கையுடன் இருங்கள் என்பதே. இதே அறிவுரையையேதான் நெருக்கடிக்கு உள்ளான மற்ற குருமார்களின் சீடர்களுக்கும் என்னை நாடிவந்த போது சொல்லி வந்திருக்கிறேன். உலகெங்கும் உள்ள ஏராளமான மக்களின் தனிப்பட்ட துயரங்களை போக்க அவர் உதவி செய்துள்ளார் என்பது ஐயத்துக்கு இடமில்லாத உண்மையாகும். அவரது உபதேசங்கள் ஓஷோவின் போதனைகளைப் பல சமயங்களில் நினைவு படுத்துகின்றன. அவற்றோடு பாரம்பரிய சடங்குகளை மீட்டுருவாக்கம் செய்துஹிந்து தர்மத்தின் மரபு வழியான கோட்பாடுகளையும் அவர் இணைத்துள்ளார்.
ஹிந்துக்களேமதச்சார்பற்ற ஊடகங்கள்நம் மத நம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகும்குருமார்களுக்கு,எப்போதும் 
சந்தேகத்தின் பலனை அளியுங்கள் (Please give the benefit of doubt) என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்..இதுபோன்ற சிக்கல்கள் மற்ற மதங்களுக்கு வருகின்றபோது அவர்கள் கதவைசாத்திக்கொண்டு தமக்குள்ளே அவற்றை முடித்துக் கொள்கிறார்கள்.ஹிந்துக்களுக்கு தமக்குள்ளே சிக்கலை சமாளிப்பதற்கான அமைப்பு ஏதும் இல்லை. எனவே இந்த விவகாரங்கள் பொது மன்றத்திற்குவருகின்றன. மதச்சார்பின்மை வாதிகள் இதை ஹிந்துமதத்தினை இழிவு படுத்துவதற்கும் கேலிசெய்வதற்கும் வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த மாதிரி சிக்கல்கள் வருகின்ற போதெல்லாம் எதிராளிகள் பக்கம் சேர்வோரையும்தீர விசாரிக்காமல் நம்மவர்களை கைவிடுகிற ஹிந்துக்களையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். உறுதியற்ற பல மனிதர்களுக்கு இது மிகவும் எளிதானதே. தமது சமுதாயத்தின் ஒற்றுமைக்காக தோளை உயர்த்தி அதனோடு நிற்பது தான் கடினமானது.
நிறைவாகஇந்த நிகழ்வுகள் நடக்கின்ற சமயத்தில் அவற்றைக் கண்ட சாட்சியாக நான் இருக்கவில்லை. தவிர இந்த வழக்கினைப்பற்றி விவாதிப்பதற்குத்தகுதியுள்ள சட்ட நிபுணரும் நான் அல்லன். ஆனால் என்னுடைய விசுவாசம் தெள்ளத்தெளிவாக ஒரு ஹிந்துவுடையதாகவே இருக்கிறது.
அன்புடன்,
ராஜிவ் மல்ஹோத்ரா
 



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator