முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது.. புதிய தகவல்கள்
------------------------------------------------------------------------------
கேரட், மீன் போன்ற உணவுகளை உட்கொண்டால் கண்களுக்கு நல்லது என்பது இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள். ஆனால் முட்டையில் கண்களை பாதுகாக்கும் ஏகப்பட்ட மூலப்பொருட்கள் இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
- முட்டையிலுள்ள லுடீன் உள்ளிட்ட சத்து பொருட்கள் விழித்திரையை பலப்படுத்தும்
- கேட்டராக்ட் எனப்படும் கண் புரை சமீப காலத்தில் அதிக மக்களை பாதிக்கிறது. ஆனால் கண் புரை வராமல் தடுக்கும் ஆற்றல் முட்டைக்கு உள்ளது.
- கண்ணுக்கு தேவையான புரத சத்துக்கள் முட்டையின் மஞ்சள் கருவில்தான் இருப்பதால் மஞ்சள் கருவை ஒதுக்கிவிடக்கூடாது.
- மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் இருப்பதால், இதய பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளை கருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
- தினமும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவோருக்கு 5 வாரங்களில் ரத்தத்தில் லுடீன் சத்து 50% வரை அதிகரிக்கும்
- விட்டமின் ஏ பற்றாக்குறைதான் கண்பார்வை குறைபாடுக்கு முக்கிய காரணம். முட்டையில் அதிகப்படியான விட்டமின் ஏ இருப்பது சிறப்பு.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

No comments:
Post a Comment