சென்ற நூற்றாண்டின் பெரும்பகுதிக் காலம் வரையில் ஒவ்வொரு வீட்டிலும் நாம் காணக்கூடிய முக்கியமான கட்டுமானம் திண்ணை. சிறிய ஓட்டு வீடென்றால் அதற்கேற்ற அளவில் சிறியதாகவும், பெரிய ஜமீன்தார் பாணி வீடுகளாயிருந்தால் ஏறக்குறைய ஒரு பேட்மிண்டன் ஆடுகளம் அளவுக்கும் திண்ணைகள் கட்டப்பட்டிருக்கும். அவ்வளவு ஏன், சற்று நடுத்தர மான அளவுள்ள குடிசை வீடுகளில் கூட மண்ணால் எழுப்பப்பட்டு சாணத்தால் மெழுகப்பட்ட திண்ணைகளைப் பார்க்கமுடியும், முன்பெல்லாம். தரையிலிருந்து சுமார் மூன்றடி உயரம் வரை சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ சுவர்கள் எழுப்பப்பட்டு, நடுவில் இறுக்கமாக மண்ணைக் கொட்டி சமதளமாகச் செய்து, அதன் மேற்பரப்பினை சிமென்ட்டுக் கலவையைப் பரப்பி மூடிவிட்டால் திண்ணை தயார். பணக்கார வீடுகளில் திண்ணைகளின் மேற்பகுதியைக் கடப்பா கற்களாலும் மூடுவதுண்டு. அவரவர் வசதிக்கேற்ப உள்ளூர் மரங்களோ பர்மா தேக்கு மரங்களோ தூண்களாக மாறி அந்தத் திண்ணைகளிலிருந்து கிளம்பி வீட்டின் மேற்கூரையைத் தாங்கி நிற்கும். திண்ணைகளும், சுவர்களும் சந்திக்கும் ஆங்கில 'L' போன்ற பகுதியில் முதுகைச் சாய்த்து இளைப்பாறுவதற்கு வசதியாகக் கருங்கல் அல்லது சிமெண்ட்டினால் ஆன சாய்மானங்களோ, திண்டுகளோ கட்டப்பட்டிருக்கும். சோபா, சாய்வு நாற்காலி போன்றவற்றிற்குத் தேவையேயில்லாமல், வயதான பெரியவர்களின் முதுகுகளை அரவணைக்கும் ஒய்யாரக் கட்டுமானங்கள் அவை. இத்தகைய வீடுகளின் வாசலைத் தாண்டி நுழைந்ததும் நம்மை முதலில் எதிர்கொள்வது இந்தத் திண்ணைகள்தான். திண்ணைகள் தரும் சவுகரியங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லப்போனால், அந்தக் காலத்திய வாசற்திண்ணைகள், இப்போதைய வரவேற்பறையின் மறுவடிவம் எனலாம். இத்தகைய வீடுகளின் வாசலைத் தாண்டி நுழைந்ததும் நம்மை முதலில் எதிர்கொள்வது இந்தத் திண்ணைகள்தான். திண்ணைகள் தரும் சவுகரியங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லப்போனால், அந்தக் காலத்திய வாசற்திண்ணைகள், இப்போதைய வரவேற்பறையின் மறுவடிவம் எனலாம். வீட்டு விசேஷங்களுக்கு வருகை தரும் உறவினர்களையும், அன்றாடம் சந்திக்க வீடு தேடி வருகின்ற ஊர்ப் பெரிய மனிதர்களையும் நண்பர்களையும் சந்திக்கக் கூடிய வரவேற்பறையாக அந்தக் காலத்தில் பயன்பட்டவை திண்ணைகள்தான்.
காய்கறி, தயிர், நெய், துணிமணிகள் போன்றவற்றைத் தலைச்சுமையாகக் கொண்டுவந்து விற்பனை செய்கிறவர்களின் வியாபாரத் தலமும் திண்ணைகளே. வயசாளி களின் வம்புப் பேச்சுக்கும், மாமியார் களின் குத்தல் பேச்சுகளுக்கும் திண்ணைகளே தாய்மடி. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், கல்விச் சாலைகள் ஊர்தோறும் திறக்கப்படாத காலகட்டங்களில் திண்ணைப் பள்ளிகள் மூலம் சிறுவர் சிறுமிகள் ஆரம்பக் கல்வி பெற்றுப் பிறகு அண்டை நகரங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பபட்டார்கள். நுழைவுத் தேர்வு, ஆயிரக்கணக்கில் ஃபீஸ் மற்றும் டொனேஷன் ஆகியவற்றுக்கு இடமேயில்லாத பொற்காலம் அது. திண்ணைகள் இருந்த வீடுகளின் குழந்தைகள் கோடை விடுமுறை உட்பட எல்லா விடுமுறைக் காலங்களையும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கண்ணாமூச்சி, தாயக்கட்டை, ஏழு கல் விளையாட்டு, பரமபதம், பல்லாங்குழி ஆகியவையுடன் 1970-களில் கேரம் போர்டு, செஸ் போன்றவற்றையும் சிறுவர்களும் சிறுமிகளும் தத்தம் வீட்டுத்திண்ணைகளிலோ அல்லது தங்கள் நண்பர்களின் வீட்டுத் திண்ணைகளிலோ ஆடிக் களித்தார்கள். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், கல்விச் சாலைகள் ஊர்தோறும் திறக்கப்படாத காலகட்டங்களில் திண்ணைப் பள்ளிகள் மூலம் சிறுவர் சிறுமிகள் ஆரம்பக் கல்வி பெற்றுப் பிறகு அண்டை நகரங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பபட்டார்கள். நுழைவுத் தேர்வு, ஆயிரக்கணக்கில் ஃபீஸ் மற்றும் டொனேஷன் ஆகியவற்றுக்கு இடமேயில்லாத பொற்காலம் அது. திண்ணைகள் இருந்த வீடுகளின் குழந்தைகள் கோடை விடுமுறை உட்பட எல்லா விடுமுறைக் காலங்களையும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கண்ணாமூச்சி, தாயக்கட்டை, ஏழு கல் விளையாட்டு, பரமபதம், பல்லாங்குழி ஆகியவையுடன் 1970-களில் கேரம் போர்டு, செஸ் போன்றவற்றையும் சிறுவர்களும் சிறுமிகளும் தத்தம் வீட்டுத்திண்ணைகளிலோ அல்லது தங்கள் நண்பர்களின் வீட்டுத் திண்ணைகளிலோ ஆடிக் களித்தார்கள். வெயில் கால இரவுகளில் காற்றாடப் படுத்துறங்கும் கட்டிலாகவும் திண்ணைகள் பயன்பட்டன. திண்ணைகளால் இன்னொரு பயன்பாடும் உண்டு. கோயில் திருவிழாக்களைக் காணவும், உறவுகளைப் பார்க்கவும் கால்நடையாக ஊர்விட்டு ஊர் செல்லும் வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்கும் சத்திரமாகவும் திண்ணைகள் விளங்கின. வசதியுள்ள வீடுகள் என்றால் வழிப்போக்கர்கள் தங்கும் அந்தத் திண்ணையே அவர்களுக்கான அன்னதானச் சத்திரமாகவும் மாறிவிடும். இவ்வளவு ஏன்? பெருமழைக்காலங்களில் ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கும் இத்திண்ணைகள் தஞ்சம் கொடுக்கும். குடும்பங்களுக்குள் மனிதர்களே தனித்தீவுகளாகப் போய்விட்ட இக்காலத்தில், வெளியாருக்கும், கால்நடைகளுக்கும் அடைக்கலம் தரும்படிக் கேட்கவும் முடியாது. அதை யாராலும் செயல்படுத்தவும் முடியாது. ஆனால் அவரவர் குடும்ப உறுப்பினர்கள் அனுபவித்து மகிழும் வகையில், தத்தம் வீடுகளில் வசதிப்பட்ட ஓர் இடத்தில் ஒரு சிறிய திண்ணையைக் கட்ட இடம் ஒதுக்கலாம் அல்லவா..? | திண்ணைகள் எங்கே போயின? திண்ணைகள் இருந்த வீடுகளின் குழந்தைகள் கோடை விடுமுறை உட்பட எல்லா விடுமுறைக் காலங்களையும் கொண்டாடி மகி... |
|
No comments:
Post a Comment