எல்லையற்றதை எண்ணுகிறேன் எழுதுகிறேன் தொடரை படித்து விட்டு ஒரு நண்பரின் பின்னூட்டம்.
Janarthanan Jana அருமையான பதிவு ! எத்தனை பேர் இதை படிப்பர்கள் என்று தெரியவில்லை ! நாம் நம் கடமையை செய்வோம் ! ஆனால் இவ்வளவு உண்ணதமான ஒரு தருமம் கடைதேறா இந்துக்கள் என்ற ஒரு புளு ஜென்மங்களிடம் வந்து சேர்ந்த்து அந்த இறைவனின் தவறோ என்னவோ ////
அப்பழுக்கற்றவன் இறைவன். அவன் எங்கே தவறு செய்கின்றான் ?
யாரால் எழுதப் பட்டதாயினும் சரி. நல்ல பதிவுகளை மிக குறைந்த எண்ணிக்கையாளர்களே படிக்கிறார்கள். முன் ஜென்ம கர்ம வினையை பொறுத்தே நல்ல பதிவுகளை படிக்கும் எண்ணமும், ஆர்வமும் ஏற்படுகிறது.
ஒரு சிலருக்கே இவ்விஷயங்களை படிக்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது, ஒரு சிலரே இவற்றை ஆழ்ந்து சிந்திக்கிறார்கள்.
பதினைந்து வயதிருக்கும், ஆன்மீக எண்ணங்கள் அதிகமாய் என்னுள் ஏற்பட்டுக் கொண்டிருந்த நேரம். எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. எல்லையற்றதை நோக்கி செல்ல வேண்டும் எனும் எண்ணங்கள் குறைந்து நாம் திசை மாறிப் போய்விட்டால், நாம் செய்த ஆன்மீக சாதகங்கள் எல்லாம் வீணாகி போகுமா என்று யோசித்தேன். இந்த எண்ணத்தோடே கீதையில் ஒரு பக்கத்தை யதேச்சையாய் திறக்க, அதே போன்ற ஒரு கேள்வி அர்ஜுனனால் கேட்கப் பட்டிருப்பதை கண்டேன்.
பகவானின் பதில் நிம்மதி அளித்தது. ஒரு ஜென்மத்தில் ஒரு சாதகன் சேர்த்த ஆன்மீக ஞானத்தை அவனுக்கு மறு ஜென்மத்தில் நான் தருவிக்கிறேன் என்கிறார். அதாவது இது "வங்கி இருப்பு" போல் நம்மோடு வருகிறது. அதனால்தான் ரமணர் போன்றவர்களுக்கு சிறு வயதிலேயே அத்தனை ஞானம் ஏற்படுகின்றது.
ஆகையால் நல்ல பதிவுகளை படிப்பதற்கு முன் ஜென்ம முயற்சியும் காரணமாய் உள்ளது.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment