யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதிதான் ஸ்ரீ ருத்ரம் .தைத்ரீய சம்ஹிதையில் நாலாவது காண்டத்தின் நடு நாயகமாக விளங்குவது.
யஜுர் வேத சாகைகள் 101லும் , மற்ற வேத சாகைகளிலும் படிக்கப் படுவதால் இது' சத ருத்ரீயம்' எனப்படுகிறது.
ஸ்ரீ ருத்ர ஜபத்தினால் கை கூடாத நன்மையே இல்லை என்று சொல்கிறார்கள்.
ஸ்ரீ ருத்ர சாராம்சம்
----------------------------
முதல் அனுவாகம்: ஈஸ்வரனுடைய கட்டளையை மீறி நடந்து கொண்டவர்களிடம் கோபம் கொண்ட அவர் மன்னித்துப் பிரசன்னம் ஆகவேண்டும் என்ற பிரார்த்தனை
2 முதல் 9 அனுவாகங்கள் : பகவானுடைய சர்வேச்வரத்வம்,சர்வ சரீரதவம் ,சர்வ அந்தர்யாமித்வம் முதலியவற்றைக் குறிக்கும் நாமங்களால் நமஸ்காரம்.
10 வது அனுவாகம்: ஈஸ்வரனிடம் நமது இஷ்டங்களை நிறைவேற்ற வேண்டுதல்
11வது அனுவாகம்: ருத்ர கணங்களுக்கு நமஸ்காரம்
2வது முதல் 9வது வரை உள்ள விஷயங்கள் நம்மை ஆட்கொள்ளுபவை .
" உலகில் காண்பதெல்லாம் அவர் வடிவே ஆகும்.திருடர்களின் உடல்களிலும் கூட அவர் நிறைந்துள்ளார்,
உட்கார்ந்து இருப்பவர்களாகவும்,படுத்துக் கொண்டு இருப்பவர்களாகவும்,தூங்குகிறவர்களாகவும் , விழித்துக் கொண்டு இருப்பவர்களாகவும்,சபையில் உள்ளவர், சபையில் வீற்றிருப்பவர் தச்சர்கள், குயவர்கள்,வேடர்கள், செம்படவர்கள் எல்லாமாக அவரே இருக்கிறார. அவரைப் பொருத்தவரை எதுவுமே அற்பம் அல்ல. தும்பைப் பூவும், ஊமத்தம் பூவும் கூட சிவ ஆராதனைக்கு உதவும்.
உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களும், பிராணிகளும், பறவைகளும், புழு பூச்சிகளும்,எல்லா செயல்களும் - திருட்டு முதல் ஆசிரியப் பணி வரை, வீரன் முதல் கோழை வரை, சப்த மாதர்கள், சப்த கணங்கள், பஞ்ச பூதங்கள், கடல், நதி ஓடை, மேகம், சவாலை, நவக்ரஹங்கள் என்று எல்லாம் ருத்ர மயமான பெரிய பட்டியலை ஸ்ரீ ருத்ரம் வழங்குகிறது. அதில் பிரபஞ்சம் முழுதுமே அடங்கியுள்ளது.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment