"ரைஸ் பக்கெட் சேலஞ்சுக்கு" நீங்கள் தயாரா ? (மறக்காமல் இதை பகிருங்கள்)
ஏ.எல்.எஸ்., எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டவும் உருவாக்கப்பட்டதுதான் "ஐஸ் பக்கெட் சவால்". சமூக வலைதளங்களின் மூலம் உலகில் வேகமாக இது பரவி வருகிறது.
நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் நன்கொடை கிடைக்கிறது என்றாலும் பல நாடுகளில் இதனை எதிர்க்கின்றனர். தண்ணீரை வீணாக்குகின்றனர் எனவும், விளம்பரம் தேடுகின்றனர் எனவும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் குளிர்ந்த நீரை தலையில் ஊற்றுவதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். ஸ்காட்லாந்தில் ஒரு இளைஞர் இந்த சவாலை மேற்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இதற்கு மாற்றாக இந்தியாவில் ரைஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு லதா (38) எனும் பத்திரிகையாளர் ஏழை மக்களின் பசியை போக்கும் எண்ணத்துடன் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கொடுக்கும் சக்தி படைத்த யாராயினும், வசதி இல்லாத ஏழை ஒருவருக்கு ஒரு வாளி அரிசி கொடுக்க வேண்டும். அரிசி கொடுத்த புகைப்படத்தை 'பேஸ்புக்கில்' பதிவேற்றம் செய்கையில் ஆயிரக்கணக்கான 'லைக்'களும், 'ஷேர்'களும் குவிந்து அந்த கொடையாளரின் புகைப்படமும், இந்த செய்தியும் பரவத் தொடங்கி, புகழை நோக்கி இழுத்துச் செல்கின்றது.
தனது பங்குக்கு முதல் பயனாளிக்கு 20 கிலோ அரிசி வழங்கி இந்த அரிய சேவையை தொடங்கி வைத்த மஞ்சு லதா கலாநிதி, 'சமைக்காத அரிசி மட்டுமல்ல.., ஒரு பக்கெட் சமைத்த உணவு, வசதி இருந்தால் ஒரு பக்கெட் பிரியாணி, அல்லது சுமார் 100 ரூபாய் அளவிலான மருந்துகளை தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கி, யார் வேண்டுமானாலும் இந்த மக்கள் சேவையில் பங்கேற்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சவாலை ஏற்று தெலுங்கானாவின் கரீம்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கடந்த புதன்கிழமையன்று 2200 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் தானமாக வழங்கி சாதனை படைத்துள்ளனர். மேலும், இதுவரை நாடுதழுவிய அளவில் ஆயிரக்கணக்கான கொடையாளர்கள், இந்த திட்டத்தின் வாயிலாக லட்சக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்கியுள்ளனர். இதன் மூலம் தண்ணீர் வீணடிக்கப்படுவதில்லை. மாறாக, வறுமைப் பேயை விரட்டி, பசி நோயை போக்கும் சமுதாயத்துக்கான சிறந்த மாற்று மருந்தாக இந்த சேவை கருதப்படுகின்றது.
மஞ்சு லதா கலாநிதி என்பவரின் மூளைக்குழந்தையான இந்த "ரைஸ் பக்கெட் சவால்" நிகழ்ச்சியில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. உங்கள் வீட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசியை நிரப்பி, தேவையுள்ள நபர்களுக்கு வழங்கி உதவுங்கள். அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து, 'பேஸ்புக்'கில் பதிவேற்றம் செய்து, பிறரும் இந்த நல்லபழக்கத்தை கடைபிடிக்க உதவுங்கள்.
நன்றி தினமலர் மற்றும் 'செய்தி' இனையதளம்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment