| காபி ஏற்றுமதியில் உலக அளவில் 'டாப் டென்' நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது
.நடப்பு ஆண்டில் ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 3 லட்சத்து 82ஆயிரத்து 909 மூட்டைகளை (ஒரு மூட்டை 60 கிலோ எடை கொண்டது) ஏற்றுமதி செய்யப்பட்டு 4வது இடத்தை பிடித்துள்ளது.2 கோடியே 98 லட்சத்து ஆயிரத்து 370 மூட்டைகளை ஏற்றுமதி செய்து பிரேசில் முதல் இடத்தில் உள்ளது.வியட்நாம் 2 கோடியே ஒரு லட்சம் மூட்டைகளை ஏற்றுமதி செய்து 2வது இடத்திலும், கொலம்பியா 8 லட்சத்து 98,384 மூட்டைகளை அனுப்பி 3வது இடத்திலும் உள்ளது. எதியோபியா 3 லட்சத்து 80,305 மூட்டைகளை ஏற்றுமதி செய்து 5வது இடத்தையும், இந்தோனேசியா 3 லட்சத்து 70ஆயிரம் மூட்டைகளை அனுப்பி 6வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த நாடுகளை தொடர்ந்து, ஹோன்டுராஸ் 3லட்சத்து 42ஆயிரத்து 818 மூட்டைகளை ஏற்றுமதி 7 வது இடத்தை கைப்பற்றியுள்ளது. உகாண்டா 3 லட்சத்து 14,304 மூட்டைகளை அனுப்பி 8வது இடத்தையும், கௌதமாலா 2லட்சத்து 93,312 மூட்டைகளை அனுப்பி 9வது இடத்தையும் பிடித்துள்ளது. மெக்சிகோ 2 லட்சத்து 25ஆயிரம் மூட்டைகள மட்டுமே அனுப்பி 10வது இடத்தில் உள்ளது.உலக அளவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 9.726 மில்லியன் மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 9.380 மில்லியன் மூட்டைகள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. இந்த தகவல் சர்வதேச காபி அமைப்பிடம் உள்ள புள்ளி விவரத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment