இன்றைய ராசி பலன் (2014.09.14)
மேஷம்
கவலைகள் தீரக் கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பண வரவு திருப்தி தரும்.
ரிஷபம்
கார்த்திகேயனை வழிபட்டு கவலைகளை போக்கிக் கொள்ள வேண்டிய நாள். கொடுக்கல் & வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பீர்கள்.
மிதுனம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். அரசு வழிச் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
கடகம்
நல்ல வாய்ப்புகள் நாடிவரும் நாள். பொது நல ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். தனலாபத்தால் சந்தோஷம் கிடைக்கும்.
சிம்மம்
எடுத்த காரியங்களிலெல்லாம் இனிதே வெற்றி காணும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர்.
கன்னி
ஆறுமுகப் பெருமான் வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசும் சூழ்நிலை உருவாகலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவொன்று வந்து சேரும்.
துலாம்
யோசித்து செயல்வபடுவதன் மூலம் யோகங்களை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
விருச்சகம்
முன்னேற்றம் கூட முருகப் பெருமானை வழிபடவேண்டிய நாள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் நெருங்கிய நட்பு கிட்டும். பொருளாதார வளர்ச்சி மேலோங்கும். பயணம் பலன் தரும் விதத்தில் அமையும்.
தனுசு
சண்டை சச்சரவுகளை சாமர்த்தியமாகச் சமாளிக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கி கொள்ளும் எண்ணம் உருவாகும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
மகரம்
பிள்ளைகளின் பிரியம் கூடும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் உருவாகும். உத்தியோக அனுகூலம் உண்டு. வீடு கட்டும் பணிக்கு வித்திடுவீர்கள்.
கும்பம்
செயலில் வேகம் அதிகரிக்கும் நாள். பாராட்டும், புகழும் கூடும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
மீனம்
மயில் வாகனனை வழிபட்டு மகிழ்ச்சி காண வேண்டிய நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment