----:முதல் உதவி:----
குழந்தைகள் காசு, பட்டாணி என கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக்குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
குழந்தையின் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால், பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனிய வைத்து, ஒரு கையால் தாங்கிய படி, தோள் பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் ஓங்கித் தட்ட வேண்டும்.
இப்படிச் சில முறைகள் தட்டினால், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியே வந்துவிடும்.
பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக்கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.
நன்றி:- டாக்டர் விகடன்.
********************************
குழந்தைகள் எப்பொழுதும் நமது கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும்.
குறிப்பாக, இரண்டு குழந்தைகள் வீட்டில் இருந்தால் பெரிய குழந்தை கீழே போடும் பென்சில், சிறிய ரப்பர் துண்டுகள், விளையாட்டு பொருட்களை சின்ன குழந்தை எடுத்து வாயில் போட வாய்ப்பு உள்ளது.
சாலையில் செல்லும் போது குழந்தையை இடதுபக்கம் [வண்டிகள் செல்லும் திசைக்கு மாற்று பக்கத்தில்] இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள் கரத்தை நாம் தான் பிடித்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு சக்கர வாகனத்தில் தனியாக விட்டு விட்டு பக்கத்தில் தானே என்று ஏதாவது வாங்கிக் கொண்டோ
பேசிக்கொண்டோ இருக்கக்கூடாது.
நன்றி:- அம்மாவின் பக்கங்கள்
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment