உன்னை பற்றி சிந்திக்கும் நேரம் எனக்கு போதவில்லை சங்கரா!!
உன்னை தவிர்த்து சிந்திக்க என்னிடம் வேறு ஒன்றும் இல்லை சங்கரா!!
உன்னையே நினைத்து நினைத்து என்னை நான் மறந்து போன அந்த நொடிகள் மட்டுமே போதும் எனக்கு சங்கரா!!
உன்னுடன் இருக்கும் அந்த நொடி நகராமல் அப்படியே உறைய வேண்டும் சங்கரா!!
உன் தனி கருணை என் இதயமதில் நுழைந்த பின்னர் வேறு எதுவும் அதில் நுழைய என் இதயத்திற்கு வாசலே இல்லாமல் போனதில் ஒரு
வியப்பும் இல்லை சங்கரா!!
உன் பெருமையே புரிந்த பின்னர் வேறு எதையும் நான் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை சங்கரா!!
உன்னுடன் நடமாடும் அந்த காலம் மீண்டும் ஒரு முறை வர வேண்டும் சங்கரா!!
உன் சிரிப்பில் காஞ்சி மட்டுமில்லை காசியே மூழ்கி இருந்த அந்த நாட்கள் வேண்டும் சங்கரா!!
உன் திருமுகத்தில் தோன்றும் அந்த ஒளி விளக்கை பல முறைகள் கண்டுகளிக்கவேண்டும் சங்கரா!!
உன் அருகில் கூட தேவையில்லை ஏதோ ஒரு மூலையிலே அமர்ந்து உன் திவ்ய தர்சனம் அதை ஒரு நொடியும் கண் இமைக்காமல் காண வேண்டும் சங்கரா!!
உன் அருகில் அமர்ந்து கொண்டு பய பக்தியுடனே வாய் மேல் கை வைத்து பலரும் தன மன குறைகளை கூற நீ அதனை சிரம்மேல் ஏற்று
உடனே சீர் செய்யும் அந்த கலையை காலம் போவதே தெரியாமல் கண்டு கண்கள் பனிக்க வேண்டும் சங்கரா!!
உன் அருள் என்ற காப்பு என்னை சுற்றி எப்பொழுதும் இருக்க எதை கண்டும் எனக்கு பயம் எதற்கு நீயே சொல் சங்கரா!!
உன் அருளாட்சி நடக்கும் காஞ்சி மாநகரில் என் கால்கள் பட்ட உடன் என் உடம்பெல்லாம் புது மின்சாரம் பாய்வது போல் ஒரு பரவசம் அதை
எடுத்து சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகளே இல்லையே என்ன செய்வேன் சங்கரா!!
உன் அன்பெனும் தர்பாரில் என்றுமே பேதம் இருந்தது இல்லை அனைவரும் சமமே என்று சொல்லும் மாண்புகள் பல கொண்ட நீயே எந்தன் மனசாட்சி இதில் மாற்றமே இல்லை சங்கரா!!
உன் ஆசிகளை நாளும் எமக்களித்து விட்டு பிறகு"இன்னும் உனக்கு என்ன கண்ணா வேண்டும்"என்று கேட்க சத்தியமாக உன்னால் மட்டுமே முடியும் வேறு என்ன சொல்ல சங்கரா!!
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment