உலகம் நம் குடும்பம் அதில் மகிழ்ச்சிக்கான வழிகள்--ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
* உலகில் அனைவரும் புண்ணியம் செய்ய நினைக்கிறோம். ஆனால், பெரும்பாலும் பாவச் செயலில் மட்டுமே ஈடுபடுகிறோம்.
* ஆசையின்றி செய்யும் எந்தச் செயலும் பாவம் ஆகாது. மனதில் கொஞ்சம் ஆசை எழுந்தாலும் அது பாவகாரியமே.
* வாக்கினால் புண்ணியம் செய்ய விரும்பினால், கடவுளின் திருநாமத்தைச் சொல்லுங்கள்.
* மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றாலும் நன்மையை மட்டுமே செய்து வர வேண்டும்.
* நல்வழியில் பொருள் தேட வேண்டும். அதில் தர்மவழியில் சிறிது செலவழிப்பதே மகிழ்ச்சிக்கான வழி.
* இதயமே கடவுளின் இருப்பிடம். அதன் தூய்மையை காப்பது நம் கடமை.
* தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது இஷ்ட தெய்வத்தின் திருவடிகளை மனதில் தியானியுங்கள்.
* உண்ணும் உணவை கடவுளுக்கு நன்றியுடன் அர்ப்பணித்து விட்டு, பிரசாதமாக சாப்பிடுங்கள்.
* ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள். ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகுணர்வு மிளிரும்.
* கடவுள் நமக்கு சக்தியும், புத்தியும் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.
* பண்டிதர் முதல் பாமரர் வரை, 'எதிலும் கணக்காயிருக்கணும்' என்று அடிக்கடி சொல்கிறார்கள். இது பணத்தை மட்டும் குறிப்பதல்ல, பேச்சையும் குறிக்கிறது
* பேச்சைக் குறைத்தால், நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நிம்மதியை வரவழைத்துக் கொள்ள முடியும்.
* பண விஷயத்தில் கணக்காக இருக்க விரும்புகிறோம். வியாபாரத்தில் பேரம் பேசி சாமர்த்தியமாக வாங்குவது மட்டுமே கணக்காக இருப்பதாகாது.
* நியாயமான வழியில் பணம் சம்பாதிப்பதும், அதை பயனுள்ள வழியில் செலவழிப்பதுமே போதுமானது.
* உலகம் பெரிய குடும்பம். அதன் தாயும் தந்தையுமாக இறைவன் இருக்கிறான்.
* நாம் கடவுளின் குழந்தைகள் என்பதால், நாம் அனைவருமே சகோதரர்கள் என்பதை உணர வேண்டும்.
* உடல் ஆரோக்கியம், உடைத் தூய்மை இந்த இரண்டையும் விட முக்கியமானது மனத் தூய்மை.
* சத்தியம், மனதைரியம், விட்டுக் கொடுக்கும் சுபாவம், இனிய சொல் ஆகிய நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* கடவுளின் அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மனதை தூய்மைக்கும் சிறந்த வழியாகும்.
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment