Monday, 16 December 2013

ஸ்ரீ மஹா பெரியவாள் கராவலம்பம் ஸ்தோத்ரம்

ஸ்ரீ மஹா பெரியவாள் கராவலம்பம் ஸ்தோத்ரம்
------------------------------------------------------------------

ப்ராதஸ்மராமி பவதீய முகார விந்தம்
மந்தஸ்மிதம் ச ஜனிதா பஹாரம் ஜனனாம்
சம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷ லக்ஷமீம்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.

ப்ராதஸ்மராமி கலிதோஷ ஹராணி யாணி
ஹ்ருத்யானி த்வய மதுராணி மனோஹராணி
வாக்யானி தேத்ய வதனாம் புஜ நிர்கதானி
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.

வக்ஷஸ்தலம் விமலஹேம சமான வர்ணம்
பஸ்மாங்கிதம் ஜனமனோஹர குங்குமார்தம்
ப்ராதஸ்மராமி பவதோத்ர சிரம் மஹாத்மன்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.

மத்தேவ துல்ய கமனம் ச நிரீஷ்ய தேத்ய 
யாத்வா வனாந்தர மனந்த கஜாச்சலீன:
ப்ராதஸ்மராமி கஜராஜ கதிம் தவேதம்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.

தக்க்ஷேன தண்ட மவலப்ய ஸதைத்ய ரேண:
ஹஸ்தேன சாரு கலசம் ச விராஜ மானாம்
ரக்தாம்பரம் ச தவசாரு கடீஸ்மராமி
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.

விஸ்ம்ருத்ய தோஷமகிலம் ச ஸமமாப்ராதும்
த்ராது ச யாத்ய பகவன் க்ருதபக்த தீக்ஷா:
ப்ராதஸ்மராமி யதிபுங்கவ தேனுகம்பாம்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.

ப்ராதஸ்மராமி பவதீய பதார விந்தம்
யஸ்மாத் ப்ராயந்தி துரிதாணி மஹாந்திதாணி
ஆயாந்தி தாணி முஹருத்ய சுமங்களானி
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.

ஸ்னானாச்ச பானாச்ச நிஷேவனாச்ச
த்யானாச்ச பாப நிலயம் ப்ராயாந்தி
ஹேதீர்த்த பாத்னு சர்வ பதம் தே
தீர்த்தம் ச தீர்த்தி சரணம் பஜாமி
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.

(அனுதினமும் அதிகாலை வேளையில் எழுந்து நீராடி, விபூதியணிந்து, நம் ஆச்சார்யனான ஸ்ரீ பரமாச்சார்யாளை இந்த கராவலம்ப ஸ்தோத்ரம் சொல்லி வழிபடுவதால் நம் சகல பாபங்களும் நீங்கி அன்றைய தினம் நல்ல தினமாக அமையும் .)

ஸ்லோகத்தின் பொருள்:
--------------------------------
பவத்தை நீக்கும் திருமுகத்தைக் கொண்டவரே; பிறவிப்பிணியை அகற்றி செல்வத்தை அருள்பவரே; அதிசய குணாதியங்கள் நிரம்பிய காஞ்சி மடத்தின் அதிபதியே உம்மை காலை வேளைதனில் த்யானித்து வேண்டுகிறேன். என்னை கை தூக்கி அருளுங்கள்.

கலிதோஷத்தை நீக்குபவரே; அருளிதயம் கொண்டு அங்கிருந்து பிறக்கும் உங்களது தேமதுரமான வாக்கின் மூலம் எங்கள் இதயத்தை மலரச் செய்பவரே; கதியற்றவருக்கு தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றும் குணப்பொருளே; உம்மை காலை வேளைதனில் த்யானித்து வேண்டுகிறேன். என்னை கை தூக்கி அருளுங்கள்.

கலப்படமற்றத் தங்கத்தைப் போன்ற பொன்னிறமான திருமார்பு முழுவதும் திருவென்னீற்றாலும் குங்குமத்தாலும் பூசி பார்க்கின்ற மனித ஜனங்களின் மனதில் இனிமை பொங்கச் செய்பவரே; உம்மை காலை வேளைதனில் த்யானித்து வேண்டுகிறேன். என்னை கை தூக்கி அருளுங்கள்.

நடையிலும் கூரிய பார்வையிலும் வனங்களில் திரிவதிலும் மத்தகஜத்தை ஒத்தரவரே; கஜராஜனுக்கு நற்கதி அளித்ததுபோல் எனக்கும் நல்கிட உம்மை காலை வேளைதனில் த்யானித்து வேண்டுகிறேன். என்னை கை தூக்கி அருளுங்கள்.

வலக் கரத்தில் தண்டமும் இடக் கரத்தில் கமண்டலமும் தாங்கி ஒளிர்கின்ற ரக்த வர்ண மேலாடையை அணிந்து நிற்கும் திருக்கோலத்தை நினைத்து உம்மை காலை வேளைதனில் த்யானித்து வேண்டுகிறேன். என்னை கை தூக்கி அருளுங்கள்.

குறைகளை, தோஷங்களை எல்லாம் மறப்பவரே; குற்றங்கனளி எல்லாம் மன்னிப்பவரே; அனைத்தையும் பொறுத்து பக்தர்களுக்கு அருட்பார்வை அளிக்கின்ற பகவானே; அருட்பாலைப் பொழிகின்ற உம்மை காலை வேளைதனில் த்யானித்து வேண்டுகிறேன். என்னை கை தூக்கி அருளுங்கள்.

எந்த மஹானுடைய திவ்ய சரணாரவிந்தங்களைத் துதித்தால் அனைத்து விதமான மஹா துன்பங்களும் ஓடிவிடுமோ, ஸர்வ மங்களங்களும் தேடி ஓடிவருமோ, அத்தகைய பெருமை வாய்ந்த காஞ்சி மடத்தின் அதிபதியே, உம்மை காலை வேளைதனில் த்யானித்து வேண்டுகிறேன். என்னை கை தூக்கி அருளுங்கள்.

குளிக்கும்போதும், உண்ணும் போதும், தனியே துதிக்கும்போதும், த்யானம் செய்யும்போதும், எந்த தீர்த்தபாதரை நினைத்து துதித்தால் ஸர்வ பாபங்களும் விலகி ஓடிவிடுமோ, அந்த ஸ்வரூபியான உம்மை காலை வேளைதனில் த்யானித்து வேண்டுகிறேன். என்னை கை தூக்கி அருளுங்கள்.

அனுதினமும் இந்த கராவலம்ப ஸ்தோத்திரத்தைச் சொல்லி தீர்த்தமிட்டு சாக்ஷாத் பகவத் ஸ்வரூபியான சர்வஞ மூர்த்தி ஸ்ரீ மஹாபெரியவாளை த்யானித்து, ஒவ்வொரு நாளையும் பொன்னாளாக அமைத்துக் கொள்வோம்.



                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator